த.மா.கா-வின் பலத்தை அங்கீகரிக்கும் கட்சிகளோடுதான் கூட்டணி! - ஜி.கே வாசன் | TMC leader GK Vasan speaks about parliament election alliance

வெளியிடப்பட்ட நேரம்: 17:50 (16/02/2019)

கடைசி தொடர்பு:17:50 (16/02/2019)

த.மா.கா-வின் பலத்தை அங்கீகரிக்கும் கட்சிகளோடுதான் கூட்டணி! - ஜி.கே வாசன்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பலத்தை அங்கீகரிக்கும் கட்சிகளோடுதான் தேர்தல் கூட்டணியை அமைக்கப்போவதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்திருக்கிறார்.

ஜி.கே.வாசன்

திருப்பூரில் நடைபெற்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி இல்லத் திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக 
அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``முதல்வர் எடப்பாடி பழனிசாமி 2 ஆண்டுகால ஆட்சியில் மக்கள் நலப்பணிகளை செய்திருக்கிறார். அத்துடன் நிலுவையில் உள்ள பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். இனிவரும் காலங்களில் தமிழகத்துக்கு காமராஜர் ஆட்சிதான் தேவை என்பதை அகில இந்திய தலைவர்களும் உணர்ந்திருக்கிறார்கள்.

த.மா.காவின் பலத்தை அங்கீகரிக்கும் கட்சிகளுடன்தான் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியை அமைப்போம். காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் நம்முடைய ராணுவ வீரர்கள் 44 பேர் கொலை செய்யப்பட்டது மிகவும் வேதனையளிக்கிறது. அந்தத் தாக்குதலுக்கான தக்க பதிலடியை நம்முடைய அரசு கொடுக்க வேண்டும். அதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரே கருத்தோடு உறுதிமொழி எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.


[X] Close

[X] Close