உலக அமைதி வேண்டி கனடா சுற்றுலாப் பயணிகள் மாமல்லபுரம் கோயிலில் யாகம்! | Canada Tourist worship in Mamallapuram temple for world peace

வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (16/02/2019)

கடைசி தொடர்பு:18:30 (16/02/2019)

உலக அமைதி வேண்டி கனடா சுற்றுலாப் பயணிகள் மாமல்லபுரம் கோயிலில் யாகம்!

மாமல்லபுரம் வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இங்குள்ள தொன்மையான கோயில்களுக்குச் சென்று கடவுளை தரிசிப்பதும், சுற்றுவட்டார கிராமங்களைச் சுற்றிப்பார்ப்பதும் வழக்கம். கனடா நாட்டிலிருந்து மாமல்லபுரத்தைச் சுற்றிப்பார்க்க 27 சுற்றுலாப்பயணிகள் குழுவாக வந்திருக்கிறார்கள். மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருக்கின்றனர். இந்த நிலையில், கடந்த இருதினங்களுக்கு முன்பு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய ராணுவ வாகனத்தின் மீது வெடிகுண்டுகளை மறைத்துவைத்து, கொடூரத் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில், இதுவரை 44 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரம் சுற்றுலாப் பயணிகள் யாகம்

இதைக் கேட்ட அந்தச் சுற்றுலாப் பயணிகள் உலக அமைதி வேண்டி இந்து முறைப்படி வழிபட வேண்டும் என தங்கள் விருப்பத்தை ஹோட்டல் நிர்வாகத்தினரிடம் தெரிவித்திருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து அந்தக் குழுவில் உள்ள எழுத்தாளர் ஒருவர் தலைமையில் மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் கோயிலில் சிறப்பு யாகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

மாமல்லபுரம் சுற்றுலாப் பயணிகள்

மாமல்லபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தலசயனபெருமாள் கோயில் தெப்பக்குளத்தில் நடைபெற்ற இந்த யாகத்தில் கனடா நாட்டு சுற்றுலாப் பயணிகள் 27 பேரும் இந்து முறைப்படி மாலை அணிவித்துக்கொண்டு யாகத்தில் கலந்துகொண்டனர். ‘லோகட்ஷேமார்த்தம்’ யாகத்தில் கலந்துகொண்டவர்கள் மந்திரங்களை ஓதி கூட்டுப் பிரார்த்தனை செய்து வழிபட்டனர். இந்த யாகத்தின் மூலம் தங்களுக்கு மன அமைதி கிடைத்திருப்பதாகவும், உலகம் முழுவதும் அமைதி நிலவ வேண்டும் என விரும்புவதாகவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close