`வைகோவைக் கண்டித்து போஸ்டர் ஒட்டியதால் கொலைமிரட்டல்!’ - போலீஸில் புகார் கொடுத்த பா.ஜ.க நிர்வாகி | BJP Madurai district cadre files police complaint against MDMK Cadres over threatening calls

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (16/02/2019)

கடைசி தொடர்பு:20:02 (16/02/2019)

`வைகோவைக் கண்டித்து போஸ்டர் ஒட்டியதால் கொலைமிரட்டல்!’ - போலீஸில் புகார் கொடுத்த பா.ஜ.க நிர்வாகி

சமீபத்தில் தமிழகம் வந்த பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தை ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ உட்பட பல்வேறு அமைப்புகள் நடத்தினார்கள். 

வைகோ

மோடி மதுரை வந்தபோது பி.ஜே.பி மதுரை கோட்ட பொறுப்பாளர் சங்கரபாண்டி, வைகோவை வரவேற்று போஸ்டர் ஒட்டியிருந்தார். இந்த நிலையில் தனக்குத் தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாக சங்கரபாண்டி ஊமச்சிகுளம் காவல்துறையில் மனுக் கொடுத்துள்ளார்.

சங்கரபாண்டி

இதுபற்றி அவரிடம் பேசினோம், ``வைகோ மோடிக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டுவதாக அறிவித்தார், அதற்கு எதிராக, அவரை வரவேற்று போஸ்டர் ஒட்டினேன். அதற்கு சட்டரீதியாக என் மீது வழக்கு போட்டுக்கொள்ளட்டும். ஆனால், அதைவிட்டு பல்வேறு அலைபேசி எண்களில் என்னை அவதூறாகவும் மிரட்டல் விடுத்தும் சிலர் பேசுகிறார்கள். அதில், சில வெளிநாட்டு எண்கள். அதுமட்டுமல்லாமல் வீட்டில் நான் இல்லாத நேரத்தில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்து ஆபசமாகப் பேசியும் கொலை மிரட்டலும் விட்டு சென்றுள்ளனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறையில் புகார் அளித்துள்ளேன். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. அடுத்து நீதிமன்றத்தை நாட உள்ளேன்’’ என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close