சூழலியல் போராளி முகிலனைக் காணவில்லை! - காரணம் இதுதானா? | Environmental activist mukilan is missing

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (16/02/2019)

கடைசி தொடர்பு:19:05 (16/02/2019)

சூழலியல் போராளி முகிலனைக் காணவில்லை! - காரணம் இதுதானா?

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு தொடர்பான வீடியோ ஆவணங்களை சி.பி.ஐ.யிடம் விசாரணைக்கு ஒப்படைக்கப்போவதாக முகிலன் சொல்லியிருந்தார். இந்த நிலையில்..

முகிலன்

சுற்றுச்சுழல் பாதுகாப்பு இயக்கத்தின் செயற்பாட்டாளர் முகிலனை காணவில்லை என்கிற தகவல் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாகிவருகிறது.

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மற்றும் ஸ்டெர்லைட் ஆலைக்கு தண்ணீர் எடுப்பது தொடர்பாக கடந்த 2017-ல் கைது செய்யப்பட முகிலன் ஒருவருடத்துக்கும் மேலாக மதுரை சிறையில் இருந்தார். பின்னர், சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர், ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தவர்கள் குடும்பத்துக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடுக்கு காரணம் தென் மண்டல காவல்துறை ஐ.ஜி சைலேஷ் குமார் யாதவ் மற்றும் டி.ஐ.ஜி கபில் குமார் சரத்கர் இருவரும்தான் என்றும் காவல்துறை ஸ்டெர்லைட் வேதாந்தாவின் அடியாட்கள் உதவியுடன்தான் துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அரங்கேற்றியதாகவும் அண்மையில் வீடியோ ஆவணங்களை சென்னையில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.

மேலும், அத்தனை ஆவணங்களையும் சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், நேற்று இரவு சென்னையிலிருந்து ஊருக்குச் செல்வதாக திட்டமிட்டிருந்த முகிலனை இன்று காலை முதல் காணவில்லை என்கிற புகார் எழுந்துள்ளது. ஸ்டெர்லைட் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் வரும் திங்கள் அன்று தீர்ப்பு வெளியாக இருக்கும் நிலையில் வீடியோ ஆவணங்களை வெளியிட்ட முகிலன் காணாமல் போயிருப்பது காவல்துறை மீது மக்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.   

முகிலன் காணவில்லை என்கிற செய்தி தீ போல பரவிக் கொண்டிருப்பதை அடுத்து அவரின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு பேசினோம். 'எங்களுக்கும் அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. அலைபேசியும் அணைத்து வைக்கப்பட்டிருக்கிறது. ஊடகங்கள்தான் அவர் எங்கிருக்கிறார் என்று அறிய எங்களுக்கு உதவ வேண்டும்’ என்றனர்.

முகிலன் வெளியிட்ட வீடியோ ஆதாரம் கீழே..  

     

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close