ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே ஜல்லிக்கட்டு - இருநூற்றுக்கும் அதிகமான காளைகள் பங்கேற்பு! | jallikkattu held near srivilliputhur

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (16/02/2019)

கடைசி தொடர்பு:22:00 (16/02/2019)

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே ஜல்லிக்கட்டு - இருநூற்றுக்கும் அதிகமான காளைகள் பங்கேற்பு!

ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் இருநூறுக்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்தன.

ஜல்லிக்கட்டு

விருதுநகர் மாவட்டம் மகாராஜபுரம் ஆலமரத்தடி கருப்பசாமி கோயில் திருவிழா இன்று கொண்டாடப்பட்டது. திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா போட்டியைத் தொடங்கி வைத்தார். விருதுநகர், ஶ்ரீவில்லிபுத்தூர், கூமாபட்டி, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 223 காளைகள் போட்டியில் பங்கேற்றன. மாடுபிடி வீரர்கள் 130 பேர் களமிறங்கினர். மருத்துவப் பரிசோதனைக்குப் பின் காளைகள் மற்றும் வீரர்கள் போட்டிக்கு அனுமதிக்கப்பட்டனர். காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், வீரர்களிடம் சிக்காமல் தப்பியோடிய காளைகளுக்கும் கட்டில், பீரோ, மிதிவண்டி போன்ற பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

ஜல்லிக்கட்டு

நீண்ட நேரம் களத்தில் நின்று விளையாடிய காளைகளுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன. காளைகள் முட்டியதில் வீரர்கள் 10 பேருக்கு காயம் ஏற்பட்டது. இந்தப் போட்டியைக் காண சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர்.

ஜல்லிக்கட்டு

 

அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் மருத்துவக் குழுவினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


[X] Close

[X] Close