ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படுமா? - தீர்ப்பை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம் | Will Vedanta's Sterlite re- open - Judgement commence on Monday

வெளியிடப்பட்ட நேரம்: 23:15 (16/02/2019)

கடைசி தொடர்பு:01:26 (17/02/2019)

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படுமா? - தீர்ப்பை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம்

ஸ்டெர்லைட்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், கடந்த வருடம் மே மாதம் 22-ம் தேதி நடைபெற்ற 100-வது நாள் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் 13 பேர் போலீஸார் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாயினர். அதைத் தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக அரசாணை பிறப்பித்தது. அதன்படி மே மாதம் 28-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. அரசாணையை எதிர்த்து, ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்கக்கோரி தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் மனு அளித்தது. மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் மூவர் குழுவை அமைத்து ஆய்வுசெய்தது. கடந்த டிசம்பர் மாதம் விசாரணை முடிவில் சில நிபந்தனைகளுடன் மூன்று வாரத்துக்குள் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கலாம் என ஸ்டெர்லைட்டுக்குச் சாதகமான தீர்ப்பை வழங்கியது தேசிய பசுமைத் தீர்ப்பாயம். 

இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. ஸ்டெர்லைட்டுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்த பிறகும் தமிழக அரசும் அதன் அதிகாரிகளும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வருகிறது என நீதிபதிகள் நாரிமன் மற்றும் நவின் சின்ஹா அடங்கிய பெஞ்சில் வேதாந்தா எதிர் புகார் மனு தாக்கல் செய்தது. இந்த மனுக்களின் மீதான விசாரணை நடைபெற்று வந்தது. தற்போது அனைத்து விசாரணைகளும் வாதங்களும் முடிவடைந்த நிலையில் நாளை மறுநாள் திங்கள்கிழமை (பிப். 18) தீர்ப்பு வெளியாக உள்ளது. ஸ்டெர்லைட்டுக்கு எதிரான வழக்குகளில் திங்கள்கிழமை வெளியாக உள்ள தீர்ப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. 


[X] Close

[X] Close