தி.மு.க ஊராட்சிக்கூட்டத்தில் சலசலப்பு - போலீஸ் குவிப்பு கூட்டம் ரத்து! | kalayarkovil Dmk meeting Cancel

வெளியிடப்பட்ட நேரம்: 23:58 (16/02/2019)

கடைசி தொடர்பு:23:58 (16/02/2019)

தி.மு.க ஊராட்சிக்கூட்டத்தில் சலசலப்பு - போலீஸ் குவிப்பு கூட்டம் ரத்து!

திமுக முன்னாள் செயலாளரை அழைக்காமல் நடத்திவரும் ஊராட்சி சபை கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு  போலீஸ் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டு கூட்டம் ரத்துசெய்யப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் பகுதியில் திமுகவை சேர்ந்த முன்னாள் ஒன்றிய செய்லாளர் சக்திக்கு அழைப்பு விடுக்காமல் ஊராட்சி சபை கூட்டம் நடத்துவதற்கு அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கூட்டத்தை கைவிட்டு நிர்வாகிகள் திரும்ப சென்றனர்.

காளையார்கோவில் ஒன்றிய பகுதிகளில் திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டமானது திமுகவின் செய்தி தொடர்பாளரான கான்ஸ்டாண்டீன் ரவீந்திரன் தலைமையில் இன்று நடைபெறவிருந்தது. காளையார்கோவில் ஒன்றிய செயலாளராக கென்னடி என்பவர் இருந்து வருகிறார். இந்த நிலையில் காளையார்கோவில் ஒன்றியத்தின் முன்னாள் செயலாளரும் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டவருமான சக்திக்கு ஊராட்சி சபை கூட்டத்திற்கு கட்சியில் இருந்து முறையாக அழைப்பு விடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள் காளையார்கோவிலுக்கு கூட்டத்திற்கு செல்லவிருந்த வாகனங்களை தடுத்து நிறுத்த இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து காவல்துறையினர் முன்னாள் ஒன்றிய செயலாளர் சக்தியை அழைத்து கான்ஸ்டாண்டின் ரவீந்திரனுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை தொடர்ந்து சமாதானமடைந்த முன்னாள் செயலாளர் சக்தி முறையாக அழைப்பு விடுக்காததால் கூட்டத்தை புறக்கணிப்பு செய்வதாக கூறி திரும்பி சென்றார்.

இதனை தொடர்ந்து காவல்துறை பாதுகாப்புடன் சென்று காளையார்கோவிலில் ஊராட்சி சபை கூட்டம் நடத்த நிர்வாகிகள் நடவடிக்கை மேற்கொண்ட நிலையில் அங்குவந்த முன்னாள் ஒன்றிய செயலாளர் சக்தியின் ஆதரவாளர்கள் கூட்டத்தை நடத்தக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் தகராறு செய்தனர். இதனால் கூட்டத்தை கைவிட்டு நிர்வாகிகள் அனைவரும் திரும்ப சென்றனர். திமுக, ஊராட்சி சபை கூட்டத்தை நடத்த முடியாமல் திரும்ப சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close