'எதற்காகவும் கலங்காதீர்கள்... நாங்கள் இருக்கிறோம்' - நிர்மலா சீதாராமன் உருக்கம் | Do not worry about anything.We are there. Nirmala Seetharaman was born.

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (17/02/2019)

கடைசி தொடர்பு:07:00 (17/02/2019)

'எதற்காகவும் கலங்காதீர்கள்... நாங்கள் இருக்கிறோம்' - நிர்மலா சீதாராமன் உருக்கம்

அரியலூர் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் சொந்த கிராமத்திற்கு வந்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகள் மரியாதை செலுத்தினர். உங்கள் மகனின் இறப்பு ஈடுசெய்யமுடியாதது. உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம் என்று உருக்கமாகப் பேசிவிட்டு சென்ற சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

                                                  

காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் பலியான அரியலூர் மாவட்டம் கார்குடியை சேர்ந்த சிவசந்திரனின் உடல் அவரது சொந்த கிராமத்திற்கு ராணுவ வண்டியில் கொண்டுவரப்பட்டது. ராணுவ வண்டியிலிருந்து இறக்கப்பட்ட சிவசங்கரின் உடல் வீட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டு சடங்குகள் செய்யப்பட்டது. இதனையடுத்து சிவசந்திரன் உடல் அஞ்சலிக்காக பொது இடத்தில் வைக்கப்பட்டது. இதனையடுத்து பாதுகாப்பு அமைச்சர்கள் நிர்மலா சீத்தாராமன். அனந்தகுமார். மாநில அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் ராணுவ அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஜயலெட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

                                                

இதனையடுத்து சிவசங்கரனின் உடல் ராணுவ வண்டியில் ஏற்றப்பட்டு அடக்கம் செய்யும் இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது வண்டியில் இருந்து இறக்கப்பட்ட சிவ சந்திரனின் உடல் ராணுவ வீரர்களின் அணிவகுப்புடன் அடக்கம் செய்யும் இடத்திற்குத் தூக்கி செல்லப்பட்டு அவ்விடத்தில் அரசின் முழு மரியாதையுடன் 24 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி மற்றும் ராணுவ உயரதிகாரிகள் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

                                         

நிர்மலா சீதாராமனின் குடும்பத்தாரிடம் பேசியதாவது. ”உங்களது மகனை இழந்துவாடும் உங்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை.உங்கள் குடும்பத்தை நாங்கள் பார்த்துக்கொள்வோம். குழந்தைகளுக்கான கல்வி செலவையும்,அவரது மனைவிக்கு வேலை கிடைக்கவும் வழிவகை செய்யப்படும் அதைத் தாண்டி அவர்களுக்கு எந்தப் பிரச்சனை என்றாலும் தயங்காமல் எங்களை நாடலாம் உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம் எதற்காகவும் கலங்காதீர்கள் என்று சிவசந்திரனின் குடும்பத்தாரிடம்  ஆறுதல் சொல்லிவிட்டு சென்றார். 


[X] Close

[X] Close