'நீங்கள் சிந்தும் ஒவ்வொரு துளிகளுக்கும் ராணுவம் பதிலடி கொடுக்கும்' - தமிழிசை காட்டம் | Indian army will respond to every drops you are reading

வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (17/02/2019)

கடைசி தொடர்பு:06:30 (17/02/2019)

'நீங்கள் சிந்தும் ஒவ்வொரு துளிகளுக்கும் ராணுவம் பதிலடி கொடுக்கும்' - தமிழிசை காட்டம்

மகனை இழந்து தவிக்கும் உங்களுக்கு என்ன ஆறுதல் சொல்வதொன்றே தெரியவில்லை. நீங்கள் சிந்தும் ஒவ்வொரு துளிகளுக்கும் இந்தியராணுவம் பதிலடிக்கொடுக்கும். இது உறுதி என்று சிவச்சந்திரனின் மனைவியைத் தமிழிசை கட்டி அனைத்து ஆறுதல் கூறினார்.

                                            

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் 14,ம் தேதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் இதுவரையிலும் 38 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள சவலப்பேரியை சேர்ந்த சுப்பிரமணியன் வீரமரணம் அடைந்தார். இந்நிலையில் அரியலூர் மாவட்டம் கார்குடியைச் சேர்ந்த சின்னையன் என்பவரின் மகன் சிவசந்திரன் என்பவரும் இதில் உயிரிழந்துள்ளனர்..

                                            

இதனால் இரண்டு வீரர்களின் பெற்றோர்,உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த நிலையில் சி.ஆர்.பி.எப் வீரர் சிவச்சந்திரன் உடல் இன்று காலை 12 மணியளவில் திருச்சி விமான நிலையத்தில் கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சித்தாராமன், மாநில அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்,வளர்மதி, தமிழிசை எனப் பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 

                                         


இந்த நிலையில் சிவசந்திரனின் வீட்டிற்கு ஆறுதல் சொல்ல வந்தார் வந்த தமிழிசை அவர்களது குடும்பத்தாரிடம் உருக்கமாகப் பேசியிருக்கிறார். உங்கள் குடும்பத்திற்கு எப்படி ஆறுதல் சொல்வதென்பதே தெரியவில்லை. ஒரு தம்பி மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளான். தங்கை உடல்நிலை சரியில்லாமல் சிவசந்திரனை நம்பி தான் இந்தக் குடும்பமே இயங்குகிறது என்பது எனக்கு நன்கு தெரியும்.

                                          

சிவசந்திரன் இருந்து இந்தக் குடும்பத்திற்கு என்ன செய்வானோ அதனை நாங்கள் செய்கிறோம் என்று பேசிக்கொண்டிருக்கும் போதே சிவசந்திரனின் மனைவி அழத்தொடங்கினார். அவரைக் கட்டி அனைத்துத் கொண்ட தமிழிசை நீங்கள் சிந்தும் ஒவ்வொரு துளிகளுக்கும் இந்தியராணுவம் பதிலடிக்கொடுக்கும். இது உறுதி. உங்களுக்கு எந்த உதவியாக இருந்தாலும் என்னிடம் வாருங்கள் என்று ஆறுதல் கூறினார்.


[X] Close

[X] Close