`நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு! | Not contesting parliamentary elections; TN legislative election is the target says rajini

வெளியிடப்பட்ட நேரம்: 10:42 (17/02/2019)

கடைசி தொடர்பு:10:43 (17/02/2019)

`நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு!

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தலே இலக்கு என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். 

ரஜினிகாந்த்

ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் தோட்ட வீட்டில் இன்று காலை தொடங்கியது. இதில் மக்கள் மன்றத்தின் 32 மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனையின் முடிவில் ரஜினி சார்பில் அறிக்கை ஒன்று வெளியானது. அதில், ``வரும் நாடாளுமன்றத் தேர்தலில்  நான் போட்டியிடப்போவதில்லை. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலே எங்களது இலக்கு. நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் எனது ஆதரவு எந்தக் கட்சிக்கும் கிடையாது. அதனால் ரஜினி மக்கள் மன்றத்தின் கொடியையோ, பெயரையோ, என்னுடைய படத்தையோ எந்த கட்சிக்கும் ஆதரவாகப் பயன்படுத்தக்கூடாது. 

ரஜினி

தமிழகத்தின் முக்கிய பிரச்னையான தண்ணீர். வரவிருக்கும் தேர்தலில் மத்தியில் நிலையான, வலுவான ஆட்சி அமைத்து யார் தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்னையை நிரந்தரமாகத் தீர்த்து வைக்கக்கூடிய திட்டங்களை வகுத்து அதை உறுதியாகச் செயல்படுத்துவார்கள் என நம்புகிறீர்களோ அவர்களுக்கு நீங்கள் சிந்தித்து ஆராய்ந்து தவறாமல் உங்கள் வாக்குகளை அளியுங்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close