ஹைதராபாத் ஷாப்பிங், வாட்ச் கலக்‌ஷன், மஞ்சள் கலர்! - சமீரா ஃபேஷன்ஸ் | Rekka Katti Parakkudhu Manasu serial sameera reveals her fashion secrets

வெளியிடப்பட்ட நேரம்: 17:56 (17/02/2019)

கடைசி தொடர்பு:18:09 (17/02/2019)

ஹைதராபாத் ஷாப்பிங், வாட்ச் கலக்‌ஷன், மஞ்சள் கலர்! - சமீரா ஃபேஷன்ஸ்

வெஸ்டர்ன் தான் என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட். ஜம்ப் ஷூட்னா கொள்ளை இஷ்டம்.

ஹைதராபாத் ஷாப்பிங், வாட்ச் கலக்‌ஷன், மஞ்சள் கலர்! - சமீரா ஃபேஷன்ஸ்

தெலுங்கு சீரியல் மூலம் சீரியலில் தன்னுடைய என்ட்ரியைத் தொடங்கிய சமீரா, தமிழில் 'பகல் நிலவு' சீரியல் மூலம் அறிமுகமானார். 'றெக்கை கட்டி பறக்குது மனசு' சீரியலில் ஹீரோயின், வில்லி என டபுள் ரோலில் கெத்து காட்டும் சமீரா அந்த சீரியலின் இயக்குநர் என்பது கூடுதல் ஸ்பெஷல். ஆடை விஷயத்தில் அசத்தும் சமீராவின் பர்சேஸ் டீடெய்ஸ்.


ஆடை தேர்வு:

சமீரா


''என்னோட டிரெஸ் டிரெண்டியா இருக்கா என்பதை விட, எனக்குப் பொருத்தமா இருக்கானு தான் முதலில் பார்ப்பேன். வெஸ்டர்ன் தான் என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட். ஜம்ப் ஷூட்னா கொள்ளை இஷ்டம்.  ஆனா சீரியலுக்கு புடவை பொருத்தமாக இருக்கும்னு முடிவு செய்தோம். அதற்காக சிம்பிளான லைட் வெயிட் புடவைகள், எல்போ ஸ்லீவ் டிசைனர் ப்ளவுஸ், ப்ரென்ட் ஃபவ் வித் லாங்  ஹேர், ஜிமிக்கி கம்மல் என்ற கான்சப்டை தேர்ந்தெடுத்தேன். வில்லி ரோலுக்கு வெஸ்டர்ன் டிரெஸ், ஐ -லைனர் இல்லாமல் மஸ்காரா அதிகம் அணியும் டெர்ரர்லுக் கண்கள், ஃப்ரீ ஹேர் என்பதை ஃபிக்ஸ் செய்தேன்.
அக்ஸசரிஸ்:

 வாட்ச்,மோதிரமும்தான் என்னுடைய ஃபேவரைட். யுனிக்கான வெஸ்டர்ன் அக்ஸசரிஸ்களும் நிறைய வெச்சுருக்கேன். சீரியலில் சிம்பிள் லுக் என்பதால் ஜிமிக்கி கம்மல், டிரெடிஷனலான வளையல்களை யூஸ் பண்றேன். கிராண்டான டிரெடிஷனல் டிரெஸ்னா மட்டும் வித்தியாசமான இயரிங்ஸ் போடுவேன்.
ஷாப்பிங்:

 ஷாப்பிங்

ஷூட்டிங் இல்லாத நாள்ல ஹைதராபாத்துக்கு போய் ஒட்டு மொத்த ஷாப்பிங் முடிச்சிருவேன். பிளவுஸ்க்கு டிசைன் சொல்லிட்டு வந்திடுவேன். டிசைனர்ஸ் அதை எனக்கு கொரியர் பண்ணிடுவாங்க. இதெல்லாம் டிரெடிஷனல் டிரெஸ்க்கு மட்டும்தான். மாடர்ன் டிரெஸ்னா உடனே பில்லிங்தான்.
நிறத்தேர்வு :

ஃபேஷன்

                                        
எனக்கு மஞ்சள், பிங்க் கலர்னா அவளோ இஷ்டம். என் வார்ட்ரோப்ல முக்கால்வாசி இடம் இந்த கலர்ஸ்னால நிரம்பியிருக்கும்னா பார்த்துக்கோங்க. அந்தளவுக்கு கிரேஸ். இந்த கலர்ஸ் நம்மளை எப்பவும் எனர்ஜடிகா காட்டும்ங்கிறதுனால இட்ஸ் மை ஃபேவரைட். சீரியல்ல கூட என் கலர் சென்ஸ்க்கு பாராட்டு குவியும். 
 ஆன்லைன் ஷாப்பிங்:
ஷூட்டிங்கில் இப்போ பிஸி என்பதால் ஆன்லைன் ஷாப்பிங் நிறைய பண்றேன். ஆன்லைன் ஷாப்பிங் நம் நேரத்தை மிச்சப்படுத்தித் தரும்.ஆனால் சரியான அளவினை தேர்வு செய்வது தான் டாஸ்க்.வெஸ்டர்ன் ஆடைகளைப் பொறுத்தவரை ஆன்லைன் ஷாப்பிங் பெஸ்ட்.ஆனால் டிரெடிஷனல் தான் உங்கள் சாய்ஸ் எனில் ஆன்லைன் ஷாப்பிங் தவிர்க்கலாம். டிரெண்டியான அக்ஸசரிஸ்,ஷூ கலெஷன்களை தேர்வு செய்யவும் ஆன்லைன் ஷாப்பிங் பண்ணுவேன்.
மேக்கப்:

மேக்கப்


ஃப்ரீ ஹேர்,லைட் மேக்கப் என்ற கேஷ்வல் லுக் தான் பிடிக்கும்.சீரியலில் டபுள் ரோல் என்பதால் சின்ன சின்ன வித்தியாசங்களைக் காட்ட நிறைய மெனக்கிட வேண்டியிருக்கு.ஒரே நாளில் ரெண்டு கேரக்டருக்கும் ஷூட் இருந்தால் ஹோம்லி,டிரண்டி என மாத்தி மாத்தி மேக்கப் போட வேண்டி இருக்கும்.மேக்கப் ரிமூவ் பண்ணி மீண்டும் முதலில் இருந்து மேக்கப் போட்டுக்கொள்ள நிறைய சிரமப்பட வேண்டியிருக்கு..எப்போதும் ஐ-மேக்கப்பில் அதிக கவனம் செலுத்துவேன்.எனக்கான மேக்கப்பை நானே போட்டுக்கொள்வதால் கதை நகர்வுகளுக்கு ஏற்ப தோற்றத்தில் சின்ன சின்ன மாற்றங்கள் செய்து இயல்பாகக் காட்டிக்கொள்ள முடியாது.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close