`பிரதமர் மோடி மீது எதிர்க்கட்சிகளும் நம்பிக்கை வைத்துள்ளன!’ - அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் | Pon.Rathakrishnan interview

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (17/02/2019)

கடைசி தொடர்பு:08:41 (18/02/2019)

`பிரதமர் மோடி மீது எதிர்க்கட்சிகளும் நம்பிக்கை வைத்துள்ளன!’ - அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

``காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விஷயத்தில் நாட்டில் உள்ள 130 கோடி மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் உட்பட அனைவரும் பிரதமர் மோடி மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர்’’ என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பொன்.ராதாகிருஷ்ணன்

தர்ம ரக்ஷண ஸமிதி அமைப்பு சார்பில் நாடு வளம் பெற வேண்டியும், மழை பெய்து வளர்ச்சி ஏற்படவும் அம்மன் ரதயாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று வந்த இந்த ரதயாத்திரை இன்று கன்னியாகுமரி மாவட்டம் வந்தது. கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பயணம் செய்வதற்காக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் கோயில் முன்பு தொடங்கியது. இந்த  ரதயாத்திரையை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பொன்.ராதாகிருஷ்ணன்

பின்னர் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``பயங்கரவாதத் தாக்குதலில் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானுடன் போர் வருமா என கேட்கிறீர்கள். காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயத்தில் நாட்டில் உள்ள 130 கோடி மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் உட்பட அனைவரும் பிரதமர் மோடி மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர்" என்றார்.


[X] Close

[X] Close