புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த அரியலூர் சி.ஆர்.பி.எஃப் வீரர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி! | Minister Vellamandi Natarajan hand over 20 lakh rupees cheque to Ariyalur CRPF solider's family

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/02/2019)

கடைசி தொடர்பு:11:33 (18/02/2019)

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த அரியலூர் சி.ஆர்.பி.எஃப் வீரர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி!

புல்வாமா தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்தினரிடம் தமிழக அரசு அறிவித்த 20 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வழங்கினார். அவரது குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசுவேலை வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் அஞ்சலி

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 14-ம் தேதியன்று பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் இதுவரையிலும் 40-க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள சவலாப்பேரியைச் சேர்ந்த சுப்பிரமணியன், அரியலூர் மாவட்டம் கார்குடியைச் சேர்ந்த சின்னையன் என்பவரின் மகன் சிவசந்திரன் ஆகியோர் வீர மரணம் அடைந்தனர். இக் கொடூரத் தாக்குதலைக் கண்டித்து உலக நாட்டுத் தலைவர்கள் தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

இந்த நிலையில், காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் பலியான அரியலூர் மாவட்டம் கார்குடியைச் சேர்ந்த சிவசந்திரனின் உடல் அவரது சொந்த கிராமத்துக்கு ராணுவ வண்டியில் கொண்டுவரப்பட்டது. ராணுவ வண்டியிலிருந்து இறக்கப்பட்ட உடல் அவரது வீட்டில் அஞ்சலிக்காக பொது இடத்தில் வைக்கப்பட்டு மத்திய, மாநில அமைச்சர்கள் அரசு உயர் அதிகாரிகள் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து சிவசந்திரன் குடும்பத்துக்குச் சொந்தமான இடத்தில் முழு அரசு மரியாதையுடன் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.

சிவசந்திரன் உடல் நல்லடக்கம்

இதனையடுத்து, உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு 20 லட்சம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், அதற்கான காசோலையை மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் வழங்கி ஆறுதல் கூறினார். அப்போது மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலரும் இருந்தனர்.


[X] Close

[X] Close