காதல் தோல்வி - குடிபோதையில் செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய வாலிபர்! | The drunken young man climbed on the cellphone

வெளியிடப்பட்ட நேரம்: 08:14 (18/02/2019)

கடைசி தொடர்பு:08:14 (18/02/2019)

காதல் தோல்வி - குடிபோதையில் செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய வாலிபர்!

திருப்பூர் அருகே குடிபோதையில் செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்தவர் சபீர். இவர் திருப்பூர் மாநகரில் உள்ள ஒரு பிரிண்டிங் பட்டறையில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், இன்றைய தினம் அதிகளவு மது குடித்து போதை அடைந்த சபீர், தான் காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக தன் நண்பர்களிடம் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து திருப்பூர் கொங்கு மெயின்ரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் கட்டடத்துக்குச் சென்ற அவர், அங்குள்ள 50 அடி உயர செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபடத் துவங்கினார்.

பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர், செல்போன் டவரில் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த வாலிபர் சபீரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் தீயணைப்புத் துறையினரும் வரவழைக்கப்பட்டு ஒரு மணி நேர நீண்டப் போராட்டத்துக்குப் பிறகு வாலிபர் சபீரை கீழே இறக்கி அழைத்து வந்தனர். அப்போது அங்கு வேடிக்கை பார்க்கக் கூடியிருந்த பொதுமக்களையும், படம் பிடித்த புகைப்படக்காரர்களையும் சபீர் கல்லால் தாக்கத் துவங்கினார். அதன்பின் அவரைக் கைது செய்த காவல்துறையினர்  காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.


[X] Close

[X] Close