`தாக்குதலில் ஈடுபட்டவர்களை வேரறுக்க வேண்டும்’ - அரியலூரில் வைகோ ஆவேசம் | Vaiko angry speech at Ariyalur

வெளியிடப்பட்ட நேரம்: 08:50 (18/02/2019)

கடைசி தொடர்பு:08:50 (18/02/2019)

`தாக்குதலில் ஈடுபட்டவர்களை வேரறுக்க வேண்டும்’ - அரியலூரில் வைகோ ஆவேசம்

``புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளைக் கிள்ளி எறியப்பட வேண்டிய நேரம் இது. இனியும் தாமதிக்கவேண்டாம்'' என ஆக்ரோஷமாக கொந்தளித்தார் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ. 

                                         வைகோ

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தில் அவாந்திபோரா பகுதியில் பயங்கரவாதிகள் கடந்த 14-ம் தேதியன்று நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் இதுவரையிலும் 44 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள சவலாப்பேரியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் அரியலூர் மாவட்டம் கார்குடியைச் சேர்ந்த சின்னையன் என்பவரின் மகன் சிவசந்திரன் என்பவரும் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவத்துக்கு ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. வீரமரணமடைந்த சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் உடல்கள் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டன. 

                                      வைகோ

இந்த நிலையில் காஷ்மீரில் உயிர் நீத்த அரியலூர் மாவட்டம் கார்குடியைச் சேர்ந்த ராணுவ வீரர் சிவசந்திரன் குடும்பத்தினருக்கு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ நேரில் சென்று ஆறுதல் கூறினார். பின்பு அவரது சமாதிக்குச் சென்று மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினார். 

                                  வைகோ

பின்பு செய்தியாளர்களிடம் பேசியபோது. ``புல்வாமா தற்கொலைப்படை தாக்குதல், இந்தியாவைத் தாண்டி உலக நாடுகளையும் உருக்குலைய வைத்துள்ளது. பயங்கரவாதம் எந்த ரூபத்தில் வந்தாலும் வேரறுக்கப் படவேண்டும். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் கிள்ளி எறியப்படவேண்டும் நேரம் இது. உங்கள் குடும்பத்துக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்பதே தெரியவில்லை’ என கூறினார். மேலும் சிவசங்கரனுக்கு நினைவுச் சின்னம், உருவச் சிலை வைக்க வேண்டும் எனத் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தார். 


[X] Close

[X] Close