ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை - உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! | will vedantas sterlite re open judgement commence on today

வெளியிடப்பட்ட நேரம்: 10:36 (18/02/2019)

கடைசி தொடர்பு:10:47 (18/02/2019)

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை - உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், கடந்த வருடம் மே மாதம் 22-ம் தேதி நடைபெற்ற 100-வது நாள் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் 13 பேர் போலீஸார் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாயினர். அதைத் தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக அரசாணை பிறப்பித்தது. அதன்படி மே மாதம் 28-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.

ஸ்டெர்லைட்

அரசாணையை எதிர்த்து, ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்கக்கோரி தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் மனு அளித்தது. மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் மூவர் குழுவை அமைத்து ஆய்வுசெய்தது. கடந்த டிசம்பர் மாதம் விசாரணை முடிவில் சில நிபந்தனைகளுடன் மூன்று வாரத்துக்குள் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கலாம் என ஸ்டெர்லைட்டுக்குச் சாதகமான தீர்ப்பை வழங்கியது தேசிய பசுமைத் தீர்ப்பாயம். 

உச்ச நீதிமன்றம்

இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. ஸ்டெர்லைட்டுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்த பிறகும் தமிழக அரசும் அதன் அதிகாரிகளும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வருகிறது என நீதிபதிகள் நாரிமன் மற்றும் நவின் சின்ஹா அடங்கிய பெஞ்சில் வேதாந்தா எதிர் புகார் மனு தாக்கல் செய்தது. இந்த மனுக்களின் மீதான விசாரணை நடைபெற்று வந்தது. தற்போது அனைத்து விசாரணைகளும் வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. தீர்ப்பில், வேதாந்தா மனுவை நிராகரித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க இடைக்கால தடை விதித்ததுடன், வேதாந்தா  நிறுவனம் உயர் நீதிமன்றத்தை அணுக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆலையை திறக்கலாம் என்ற பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு ரத்து செய்யப்படும் அதேவேளையில் ஆலையை மூட உத்தரவிட்ட அரசாணை செல்லும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.  இதனால் தூத்துக்குடி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். முன்னதாக தீர்ப்பையொட்டி தூத்துக்குடியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

தீர்ப்பாயத்துக்கு அதிகாரமில்லை

முன்னதாக ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் மூவர் குழு அறிக்கையின் படி ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம் சில நிபந்தனைகளுடன் மூன்று வாரத்துக்குள் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கலாம் என ஸ்டெர்லைட்டுக்குச் சாதகமான தீர்ப்பை வழங்கியது. இது குறித்து பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ய பசுமை தீர்ப்பாயத்துக்கு அதிகாரமில்லை என அதிரடியாக கூறினர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close