`அந்தக் குழுவில் நான் இல்லை; கூட்டணி பற்றி கேட்காதீங்க!'‍- தம்பிதுரை | "DMK has no policy!" says thambidurai

வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (18/02/2019)

கடைசி தொடர்பு:14:20 (18/02/2019)

`அந்தக் குழுவில் நான் இல்லை; கூட்டணி பற்றி கேட்காதீங்க!'‍- தம்பிதுரை

``தி.மு.கவுக்கென்று எந்தக் கொள்கையும் இல்லை. அ.தி.மு.க வலிமையாக உள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்'' என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.

தம்பிதுரை

கரூர் மாவட்டம், பவித்திரம் ஊராட்சிப் பகுதியில் பொதுமக்களை சந்தித்து, மனுக்களைப் பெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``ஸ்டெர்லைட் ஆலை திறப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கினாலும் மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும். உச்சநீதிமன்றம் காவிரியில் தண்ணீர் திறக்க உத்தரவிட்டது. ஆனால், அதை நிறைவேற்றினார்களா. மக்கள் உணர்வுக்கு மதிப்பு அளிப்போம்.

ரஜினிகாந்த் இன்னும் அரசியல் கட்சி தொடங்கவில்லை. அவர் இன்னும் நடிகராகவேதான் இருந்து வருகிறார். தி.மு.கவுக்கு எந்தக் கொள்கையும் கிடையாது. அ.தி.மு.க வலிமையாக இருக்கிறது. அனைத்து தொகுதியிலும் வெற்றி பெறுவோம். அ.தி.மு.கவை குற்றம் சொல்வதே ஸ்டாலின் வேலையாக உள்ளது. கூட்டணி குறித்து முடிவு எடுக்கும் குழுவில் நான் இல்லாததால் கூட்டணி பற்றி கருத்து கூறமுடியாது. காஷ்மீரில் நடைபெற்று வரும் தீவிரவாதம் கண்டிக்கத்தக்கது. இந்திய மற்றும் தமிழக உளவுத்துறையைக் குறைத்து மதிப்பிடக்கூடாது. சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இருப்பினும், இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடந்து விடுகின்றன. அதன் பிறகு, எதனால், எப்படி நடந்தது என்று உளவுத் துறைதான் கண்டுபிடிக்கிறது" என்றார்.


[X] Close

[X] Close