``இங்க லஞ்சம் சர்வசாதாரணம்!''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள் | “this is common practice in india'' - cognizant fined Rs. 200 crores for giving bribe

வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (18/02/2019)

கடைசி தொடர்பு:14:10 (18/02/2019)

``இங்க லஞ்சம் சர்வசாதாரணம்!''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள்

சென்னை கே.ஐ.டி.எஸ் வளாகத்தில் கட்டடம் கட்டுவதற்காகத் தமிழக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த காக்னிசென்ட் நிறுவனத்துக்கு ரூ.200 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  

லஞ்சம் கொடுத்த காக்னிசென்ட்

சோழிங்கநல்லூரில் உள்ள கே.ஐ.டி.எஸ் வளாகத்தில் 27 லட்சம் சதுர அடியில் கட்டடம் கட்ட  காக்னிசென்ட் தீர்மானித்துள்ளது. இதற்கு அனுமதி வழங்கத்  தமிழக அரசு அதிகாரிகள் மூன்று பேர் ரூ.14 கோடி வரை லஞ்சம் கேட்டுள்ளனர். தொடர்ந்து, காக்னிசென்ட் நிறுவனத்தின் அப்போதைய தலைவர் கார்டன் கோபார்ன், தலைமை சட்டத்துறை அதிகாரி ஸ்டீபன் ஸ்குவார்ட்ஸ் ஆகியோரின் உத்தரவின் பேரில், கட்டுமான நிறுவனமே லஞ்சத்தைக் கொடுத்துள்ளது. காக்னிசென்ட் நிறுவனம் அமெரிக்காவைச் சேர்ந்தது. அமெரிக்க நாட்டு சட்டப்படி, வெளிநாட்டில் நிறுவனம் இயங்கி வந்தாலும் லஞ்சம் கொடுப்பதும் பெறுவதும் சட்டத்துக்குப் புறம்பானது. லஞ்சம் கொடுத்த தொகையை காக்னிசென்ட் நிறுவனம், கட்டுமானச் செலவில் கணக்குக் காட்டி ஈடு செய்துள்ளது. 

ஆனால், இந்த விஷயத்தை அமெரிக்காவின்  வெளிநாட்டு லஞ்ச நடவடிக்கை ஆணையம் மோப்பம் பிடித்தது. தொடர்ந்து, காக்னிசென்ட் நிறுவன அதிகாரிகள் கார்டன் மற்றும் ஸ்குவார்ட்ஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. 2016-ம் ஆண்டு இந்த இருவரும் காக்னிசென்ட நிறுவனத்தில் இருந்தும் விலகிவிட்டனர். இந்த வழக்கு நியூஜெர்சி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. லஞ்சம் கொடுத்ததால் காக்னிசென்ட் நிறுவனம் அடைந்த ஆதாயத்துடன் பெனால்டியும் கணக்கிட்டு ரூ.200 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

லஞ்சம் வாங்கிய தமிழக அரசு அதிகாரிகளின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. ஆனால், லஞ்சம் வாங்கிய தமிழக அரசு அதிகாரிகள் பற்றி தமிழக ஊழல் தடுப்பு  மற்றும் கண்காணிப்புத் துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அமெரிக்க அதிகாரிகளிடம் இருந்து கூடுதல் விவரங்களை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை கேட்டுள்ளது. விரைவில் லஞ்சம் வாங்கிய தமிழக அரசு அதிகாரிகள் பிடிபடலாம் என்று சொல்லப்படுகிறது. 

கடந்த 2013-ம் ஆண்டு கட்டுமான நிறுவனம் காக்னிசென்ட் நிறுவனத்துக்காகக்  கட்டடம் கட்ட அனுமதி கேட்டுள்ளது. ஆனால், அதற்கு முன்னதாகவே கட்டுமானப்பணிகளை தொடங்கி விட்டனர். காக்னிசென்ட் அதிகாரிகள் கட்டுமான நிறுவனத்திடம் அதுபற்றி கேட்டபோது,  'இந்தியாவில் இப்படிச் செய்வது சர்வசாதாரணமானது. லஞ்சம் கொடுத்து சரிக்கட்டிக் கொள்ளலாம் ' என்றும் ஆலோசனை கொடுத்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close