கமல் சார் கவனத்துக்கு...! - ட்விட்டரில் கலாய்த்த உதயநிதி | udhayanidhi replies to kamal's statement

வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (18/02/2019)

கடைசி தொடர்பு:14:40 (18/02/2019)

கமல் சார் கவனத்துக்கு...! - ட்விட்டரில் கலாய்த்த உதயநிதி

சென்னை எம்.ஆர்.சி.நகரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், ``நான் வித்தியாசமான விநோதமான அரசியல்வாதி, அரசியலில் எதுவும் சரியில்லை அதைச் சரிசெய்ய வேண்டும், தாமதமாக அரசியலுக்கு வந்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். சட்டமன்றத்தில் சட்டையைக் கிழித்துக்கொள்ளமாட்டேன். அப்படி சட்டை கிழிந்தாலும், நல்ல சட்டை போட்டுக்கொண்டுதான் வெளியில் வருவேன். கிராம சபைக் கூட்டம் என்று இருப்பது உங்களுக்குத் தெரியாதா.  நேற்று வந்த பையனைப் பார்த்து காப்பி அடிக்க வெட்கமாக இல்லையா. தி.மு.கவை கடுமையாக விமர்சிக்க, தி.மு.கவே காரணம், மறைமுகமாக அல்ல நேரடியாக விமர்சிப்பேன். கூட்டணியில் இடம்பெற முடியாததால் தி.மு.க-வை விமர்சிக்கவில்லை" என்று கூறினார். 

கமல்

ஏற்கெனவே தி.மு.க - கமல் இடையே கருத்து வேறுபாடு இருந்த நிலையில் கமலின் இந்தப் பேச்சுக்கு தற்போது தி.மு.க எதிர்வினை ஆற்றத் தொடங்கியுள்ளது. தி.மு.கவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியில், ``கடை விரித்தேன் கொள்வாரில்லை என்பதைப் போல கமல்ஹாசன் நிதானமின்றி பிதற்றுகிறார். கமல் பேசுவது என்ன? ஏன் இப்படிப் பேசுகிறார் என்று புரியாது. கேட்போரைத் தான் சட்டையைக் கிழித்துக்கொள்ள வைப்பாரே தவிர அவர் ஒருநாளும் சட்டையைக் கிழித்துக்கொள்ள மாட்டார். கிராம சபை கூட்டத்தை ஸ்டாலின் காப்பியடித்ததாகக் கூறியதன் மூலம் கமல்ஹாசன் தனது அரசியல் கத்துக்குட்டித்தனத்தை வெளிச்சம் போட்டுகாட்டியுள்ளார். கருணாநிதி முதல்வராக இருந்தபோதே கிராம சபைக் கூட்டத்தை அமைச்சர்களைக் கொண்டு நடத்தியுள்ளார்" என்று கடுமையாக விமர்சித்திருந்தனர். 

உதயநிதி

இதேபோல் உதயநிதி ஸ்டாலினும் தனது ட்விட்டர் பக்கத்தில், ``கிராம சபை கூட்டத்தை நான்தான் கண்டுபிடிச்சேன் என்று அறியாமையில் புலம்பும் கலைஞானி கமல் சாருக்கு இந்தப் படங்கள் சமர்ப்பணம்" என்று ஸ்டாலின் கிராம சபை நடத்திய சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். தி.மு.க-வின் ஐடி விங்கும் இதே புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர். ஆனால், இந்தப் புகைப்படங்கள் ஸ்டாலின் `நமக்கு நாமே' பயணம் செல்லும்போது எடுத்த புகைப்படங்கள் எனச் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். இது தற்போது புது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

ட்விட்டர்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close