பிரியாணியில் கறியில்லாததால் இளம்பெண் கொலை? - கோயம்பேட்டில் அதிகாலை அதிர்ச்சி | lady murdered near koyambedu bus stand for biryani

வெளியிடப்பட்ட நேரம்: 14:55 (18/02/2019)

கடைசி தொடர்பு:14:55 (18/02/2019)

பிரியாணியில் கறியில்லாததால் இளம்பெண் கொலை? - கோயம்பேட்டில் அதிகாலை அதிர்ச்சி

கொலை செய்யப்பட்ட இளம்பெண்

சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட் பகுதியில் இன்று அதிகாலை இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவரின் சடலத்தை மீட்டு கோயம்பேடு போலீஸார் விசாரித்துவருகின்றனர்.    

சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட் பகுதியில் உள்ள பூ கடை எதிரில் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். இறந்து கிடந்த இளம்பெண்ணின் கழுத்தில் வெட்டுக் காயம் இருந்தது. இதையடுத்து, அவரின் சடலத்தை மீட்ட போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்டுக் கிடந்த பெண் யார், அவரை கொலை செய்தவர் யார் என இதுவரை தெரியவில்லை. அதுதொடர்பாக போலீஸார் விசாரித்துவருகின்றனர். 

கொலை செய்யப்பட்ட இளம்பெண்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கொலை செய்யப்பட்ட பெண் குறித்து விசாரித்துவருகிறோம். நள்ளிரவில் ஒருவரும் பெண்ணும் 
அந்தப்பகுதியில் உள்ள கடையில் பிரியாணி சாப்பிட்டுள்ளனர். அதன்பிறகுதான் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்தத்தகராறில் பிரியாணியில் கறி இல்லை என்று அந்தப் பெண்ணும் அந்த நபரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்பிறகுதான் இன்று அதிகாலை கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் பிரியாணியில் கறி இல்லாத தகராறில் பெண் கொலை செய்யப்பட்டாரா என்று விசாரித்துவருகிறோம். பெண்ணின் கழுத்தில் வெட்டுக் காயங்கள் உள்ளன. கோயம்பேடு பகுதி என்பதால் வெளியூர் நபராக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்துவருகிறோம். இதற்கிடையில் கொலை செய்யப்பட்ட இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் பெண் குறித்து முக்கிய தகவல் எங்களுக்கு கிடைத்துள்ளது. அந்தத்தகவல் அடிப்படையில் விசாரணை நடந்துவருகிறது" என்றனர். 


[X] Close

[X] Close