Published:Updated:

`ஆர்டிபிசிஆர் சான்றிதழ் இருந்தால்தான் அனுமதி!'- திருச்சி ஏர்போர்ட்டில் 150 பயணிகள் வாக்குவாதம்!

திருச்சி விமானநிலையம்
திருச்சி விமானநிலையம்

கொரோனா நேரத்தில் எல்லோருமே கஷ்டப்படுகிறார்கள் என்பதால் முக்கால்வாசி பேர் ரூ.1,600 டெஸ்டை மட்டும் எடுத்துக்கொண்டு செல்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

"ஆர்.டி.பி.சி.ஆர் டெஸ்ட்டில் நெகட்டிவ் என்ற சான்றிதழோடு வந்தால் மட்டுமே துபாய் நாட்டிற்கு வரமுடியும் இல்லையேல் வரமுடியாது" என்று தடாலடியாக அறிவித்தால் 150-க்கும் மேற்பட்ட பயணிகள் திருச்சி விமான நிலையத்தில் வாக்குவாதம் செய்த சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

திருச்சி விமான நிலையம்
திருச்சி விமான நிலையம்

திருச்சியிலிருந்து துபாய்க்கு 9:25 மணிக்குப் புறப்பட வேண்டிய விமானம் மதியம் வரையிலும் புறப்படவில்லை. என்ன காரணம் என்று தெரியாமல் குழப்பம் அடைந்தனர் பயணிகள். இதனால் 150-க்கும் மேற்பட்ட விமான பயணிகள் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டனர். அவர்களும் சரியான பதிலைச் சொல்லவில்லையாம். இதனால் ஆத்திரத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் பயணிகள். இந்த சம்பவத்தால் திருச்சி விமான நிலையத்தில் இரண்டு மணிநேரமாக சலசலப்பு ஏற்பட்டது.

என்ன காரணம் என்று ஏர்போர்ட் அதிகாரிகள் சிலரிடம் பேசினோம்.”திருச்சி விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக எடுக்கப்பட்டு அதன் பின்னர் விமானத்தில் பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் இந்த கொரோனா சான்றிதழைத் துபாய் நாட்டு அரசு ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டதாம். விலை உயர்ந்த ஆர்.டி.பி.சி.ஆர் டெஸ்டை எடுத்து வந்தால் மட்டுமே பயணிகளை அனுமதிக்கப்படுவதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

 திருச்சி விமான நிலையம்
திருச்சி விமான நிலையம்

பொதுவாகத் திருச்சி விமானநிலையத்தில் இரண்டு விதமான ஆர்.டி.பி.சி.ஆர் டெஸ்ட்கள் எடுக்கப்படுகின்றன. ஒரு டெஸ்ட் ரூ.4000 வரும், இன்னொரு டெஸ்ட் ரூ.1,600. கொரோனா நேரத்தில் எல்லோருமே கஷ்டப்படுகிறார்கள் என்பதால் முக்கால்வாசி பேர் ரூ.1,600 டெஸ்டை மட்டும் எடுத்துக்கொண்டு செல்கிறார்கள். இந்த டெஸ்டைதான் துபாய் அரசு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதிகாரிகள் எவ்வளவோ பேசியும் திருச்சியிலிருந்து வரும் விமானம் துபாயில் இறங்கக்கூடாது என்று அனுமதி மறுத்துவிட்டார்கள். பின்பு திருச்சி விமான நிலைய அதிகாரிகளும் துபாய் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் "விலை உயர்ந்த ஆர்.டி.பி.சி.ஆர் டெஸ்ட்டில் நெகட்டிவ் என்ற சான்றிதழோடு வந்தால் மட்டுமே துபாய் நாட்டிற்கு வரமுடியும் இல்லையேல் வரமுடியாது" என்று கறாராகச் சொல்லியிருக்கிறார்கள்.

திருச்சி ஏர்போர்ட்: சகோதரியின் மரணம்; ஒலிம்பிக் கனவுக்காக உண்மையை மறைத்த தாய்; கதறி அழுத வீராங்கனை!
திருச்சி விமான நிலையம்
திருச்சி விமான நிலையம்

வேறு வழியில்லாமல் துபாய் செல்ல வேண்டிய பயணிகளை அழைத்து நடந்தவற்றை சொல்லியிருக்கிறார்கள். நீங்கள் இங்கிருந்து சார்ஜா சென்றுவிடுங்கள். அங்கிருந்து துபாய் எளிதாக சென்றுவிடலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். இதற்குப் பயணிகள் சம்மதித்த பிறகு அதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்திருக்கிறார்கள். எந்த பிரச்னையும் இல்லாமல் எளிதாக இந்த விஷயத்தை திருச்சி விமான நிலைய அதிகாரிகள் கையாண்டிருக்கிறார்கள்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு