`மியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்' - சென்னையில் ஒருநாள் பயிற்சி வகுப்பு | Mutual Fund Training Class in chennai

வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (18/02/2019)

கடைசி தொடர்பு:15:30 (18/02/2019)

`மியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்' - சென்னையில் ஒருநாள் பயிற்சி வகுப்பு

முதலீடு செய்வதன் அடிப்படையே பணவீக்கத்தைத் தாண்டிய வருமானத்தைப் பெறுவதாகும். அத்தகைய வருமானத்தை ஈட்டுவதற்கு பங்குச்சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் ஏற்றவையாக உள்ளன. பங்குச்சந்தையைப் பொறுத்தவரை, அதில் நேரடியாக முதலீடு செய்ய முடியாதவர்கள், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் ஈடுபடலாம். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் இருக்கும் சூட்சுமங்களைக் கற்றுத்தருவதற்காக நாணயம் விகடன் சார்பாக, `மியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்' என்ற ஒருநாள் கட்டணப் பயிற்சி வகுப்பு (கட்டணம் ரூ.3,000) தமிழகமெங்கும் நடத்தப்பட்டு வருகிறது.

மியூச்சுவல் ஃபண்ட்

ஏற்கெனவே, சென்னை, கோவை, திருச்சி, புதுச்சேரி, சேலம், ஈரோடு போன்ற ஊர்களில் பயிற்சி வகுப்பை சிறப்பாக நடத்தி முடித்துள்ளது. தற்போது  மீண்டும் சென்னையில், பிப்ரவரி 24-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த வகுப்பில், மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் சொக்கலிங்கம் பழனியப்பன் பயிற்சியளிக்கிறார்.

பயிற்சி வகுப்பில் கலந்துகொள்வதன்மூலம், மியூச்சுவல் ஃபண்டில் நாம் ஏன் முதலீடு செய்ய வேண்டும், எப்படி முதலீடு செய்ய வேண்டும், நல்ல லாபம் தரும் ஃபண்டுகளை அடையாளம் காண்பது எப்படி, யாருக்கு எந்த ஃபண்ட் ஏற்றது, எஸ்.ஐ.பி முதலீட்டின் முக்கியத்துவம் என்ன, போர்ட்ஃபோலியோவை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடை காணலாம். மியூச்சுவல் ஃபண்ட் குறித்து அறிந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள், இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறலாம். இந்த நிகழ்ச்சியில் பணம் கொடுத்துப் பதிவுசெய்ய கடைசி நாள்: 19.02.2019. http://bit.ly/2bl7WqW என்ற இணையதள முகவரியில் பணத்தைச் செலுத்திப் பதிவு செய்யலாம்.


[X] Close

[X] Close