விபத்தில் பலியான கூலித்தொழிலாளி!- பயணிகளை இறக்கிவிட்டு பேருந்தை கொளுத்திய உறவினர்கள் | The private bus is set to fire after the death of a youth in accident

வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (18/02/2019)

கடைசி தொடர்பு:15:40 (18/02/2019)

விபத்தில் பலியான கூலித்தொழிலாளி!- பயணிகளை இறக்கிவிட்டு பேருந்தை கொளுத்திய உறவினர்கள்

சேலம் கருமந்துறை மலைப்பகுதியில் தனியார் பேருந்து மோதியதால் இளையராஜா என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆவேசம் அடைந்த உறவினர்களும், ஊர்க்காரர்களும் சேர்ந்து பேருந்தை அடித்து நொறுக்கியதோடு பெட்ரோல் ஊற்றித் தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேருந்தை கொளுத்திய உறவினர்கள்

இதுபற்றி கருமந்துறை மக்களிடம் விசாரித்தபோது, ``சேலம் மாவட்டம் கருமந்துறை, கோவில்காடு மலைக்கிராமத்தைச் சேர்ந்தவர்  இளையராஜா (34). இவருடைய அப்பா பெயர் ஆண்டி. அம்மா பெயர் லட்சுமி. இளையராஜாவின் மனைவி பெயர் தனக்கொடி. இவர்களுக்கு 9-ம் வகுப்பு படிக்கும் மகளும், 5-ம் வகுப்பு படிக்கும் மகனும் இருக்கிறார்கள்.

இளையராஜா விவசாயக் கூலித் தொழில் செய்து வருகிறார். நேற்று மாலை 4 மணிக்கு கருமந்துறை பால் சொஷைட்டியில் பால் ஊற்றிவிட்டு கோயில் காட்டில் உள்ள தன் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது சேலத்திலிருந்து வேகமாக வந்த தனியார் பேருந்து பகுடுபட்டு பிரிவு ரோட்டின் அருகே இளையராஜா மீது மோதியது. இதில் இளையராஜா சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார்.

அதையடுத்து, இளையராஜாவின் பெற்றோர்களும் உறவினர்களும் ஊர்க்காரர்களும் அப்பகுதியில் குவியத் தொடங்கினார்கள். உடனே பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் அங்கிருந்து ஓடிவிட்டனர். இறந்து இடந்த இளையராஜாவைப் பார்த்து கோபம் அடைந்த உறவினர்களும், ஊர்க்காரர்களும் பேருந்திலிருந்து பயணிகள் அனைவரும் கீழே இறங்கும்படி கூறினர். இதையடுத்து, இளையராஜாவின் உறவினர்கள் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்ததோடு கேனில் பெட்ரோல் வாங்கி வந்து பேருந்தின் மீது ஊற்றித் தீ வைத்தனர். பேருந்து கொளுந்து விட்டு எரிந்தது. அதையடுத்து, கருமந்துறை காவல்துறையினர் அப்பகுதிக்கு வந்து தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்து தீயை அணைத்தார்கள். பிறகு சாலை மறியலில் ஈடுபட்ட ஊர்க்காரர்களைச் சமாதானம் செய்தார்கள்.


[X] Close

[X] Close