`எங்களையும் அந்தப் பட்டியல்ல சேருங்க!’ - விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் முன் திரண்ட மக்கள் | add our name to below poverty line: village people came to collector office

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (18/02/2019)

கடைசி தொடர்பு:20:00 (18/02/2019)

`எங்களையும் அந்தப் பட்டியல்ல சேருங்க!’ - விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் முன் திரண்ட மக்கள்

வறுமைக்கோட்டுக் கீழ் உள்ளோர் பட்டியலில் தங்கள் பெயரையும் இணைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கிராம மக்கள் நூற்றுக்கணக்கானோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பொதுமக்கள் மனு

வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள ஏழை மக்களுக்கு ரூ.2000 உதவித்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தற்போது தமிழ்நாடு முழுவதும் இதற்கான பெயர் சரிபார்ப்புப் பணி நடைபெற்றுவருகிறது. ஆனால், வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் பலரது பெயர் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை என்று பல்வேறு பகுதிகளிலும் புகார் எழுந்துள்ளது. இதனால், அவர்கள் உதவித்தொகை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த பட்டியலில் தங்கள் பெயர்களையும் சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி செவல்பட்டி, மீசலூர், மூளிப்பட்டி, வரிசையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள், இன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேரில் வந்து மனு அளித்தனர்.

இதுகுறித்து செவல்பட்டி கிராம மக்கள் கூறும்போது, ``எங்கள் ஊர் மக்கள் அனைவரும் கூலி வேலை செய்துதான் வாழ்க்கை நடத்தி வருகிறோம். 100 நாள் வேலைதான் எங்களுக்கு கைகொடுத்து வருகிறது. ஆனால், எங்கள் கிராமத்தில் 10 பேரின் பெயர் மட்டுமே வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோர் பட்டியலில் உள்ளது’’ எனத் தெரிவித்தனர்.

பொதுமக்கள் மனு

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் விசாரித்தோம், ``ஏற்கெனவே வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள வசதியானவர்களின் பெயர்கள் இந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்படும். ஏழை மக்களின் பெயர்கள், வறுமைக்கோட்டுக் கீழ் உள்ளோர் பட்டியலில் இணைக்கப்படும். வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள மக்கள், தங்கள் மனுக்களை உள்ளாட்சி அமைப்புகளில் வழங்கலாம்’’ எனத் தெரிவித்தார்.


[X] Close

[X] Close