"என் மகளோட பிரார்த்தனை நிறைவேறிட்டும்மா!" தீர்ப்பு குறித்து ஸ்னோலின் அம்மா வனிதா #sterlite | My daughter wish come true about sterlite says snowlin mother

வெளியிடப்பட்ட நேரம்: 19:12 (18/02/2019)

கடைசி தொடர்பு:19:12 (18/02/2019)

"என் மகளோட பிரார்த்தனை நிறைவேறிட்டும்மா!" தீர்ப்பு குறித்து ஸ்னோலின் அம்மா வனிதா #sterlite

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான அனைத்து விசாரணைகளும் வாதங்களும் முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. தீர்ப்பில், ஆலையைத் திறக்கக் கோரிய வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க இடைக்காலத் தடை விதித்ததுடன், வேதாந்தா  நிறுவனம் உயர் நீதிமன்றத்தை அணுக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும், ஆலையைத் திறக்கலாம் என்ற பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு ரத்து செய்யப்படும் அதேவேளையில், ஆலையை மூட உத்தரவிட்ட அரசாணை செல்லும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்னோலினின் அம்மா வனிதாவிடம் பேசினோம்.

ஸ்னோலின் அம்மா

`இந்தத் தீர்ப்பைப் பார்த்ததும் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சும்மா. இத்தனை நாள் அம்மா உன்கிட்ட வேண்டிக் கேட்டதை நீ நிறைவேத்திட்டம்மான்னு’ என் மக போட்டோவ பார்த்து நன்றி சொன்னேன். நான் யாரையும் நம்பலை. என்னால பெரிய அதிகாரிகளை எதிர்த்து ஒண்ணும் பண்ண முடியாது. ஆண்டவர்கிட்டதான் என் கோரிக்கையை வைக்க முடியும். என் பொண்ணு எல்லாத்தையும் பார்த்துட்டு இருக்கா. அவ அந்த ஆலையை திறக்கக் கூடாதுனு உசுர விட்டுருக்காம்மா.. எப்படி ஆலையைத் திறக்க விடுவா? ஆண்டவர்கிட்ட தொடர்ந்து மன்றாடிட்டே இருப்பாம்மா. நாங்க கடவுளை நம்புறோம். 

துடிதுடிக்க வலியை அனுபவிச்சு, நான் வளர்த்த என் ஆசை மகள் அந்த ஆலையை திறக்கக் கூடாதுன்னு செத்துருக்கா. இந்தத் தீர்ப்பு வந்ததும், என் பொண்ணோட வேண்டுதல் நிறைவேறிட்டுன்னு சந்தோஷப்பட்டேம்மா'' என்றபடி தேம்பி அழ ஆரம்பித்தார் வனிதா.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close