`நம்மைக் காத்த தெய்வத்தின் வீட்டுக்கு வந்திருக்கேன்!' - அரியலூரில் கண்கலங்கிய ரோபோ சங்கர் | Actor Robo shankar visits CRPF Solider ariyalur Siva chandran's house

வெளியிடப்பட்ட நேரம்: 19:59 (18/02/2019)

கடைசி தொடர்பு:20:01 (18/02/2019)

`நம்மைக் காத்த தெய்வத்தின் வீட்டுக்கு வந்திருக்கேன்!' - அரியலூரில் கண்கலங்கிய ரோபோ சங்கர்

``நம்மைக் காத்த எல்லைச்சாமியின் வீட்டிற்கு வந்திருக்கிறேன். தயவு செய்து வேறு எதுவும் கேட்காதீர்கள்!" என்று வீரமரணம் அடைந்த சிவசந்திரனின் படத்துக்கு மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினார் ரோபோ சங்கர். மேலும்  1  லட்சத்துக்கான காசோலையையும் நடிகர் ரோபோ சங்கர் வழங்கினார்.

                                                ரோபோ சங்கர்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தில் அவாந்திபோரா பகுதியில் பயங்கரவாதிகள் கடந்த 14-ம் தேதியன்று நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள சவலாப்பேரியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் அரியலூர் மாவட்டம், கார்குடியைச் சேர்ந்த சின்னையன் என்பவரின் மகன் சிவசந்திரன் என்பவரும் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவத்துக்கு ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. வீரமரணமடைந்த சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் உடல்கள் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டன. 

                                           வீரமரணம்
இந்த நிலையில் குண்டுவெடிப்பில் இறந்த அரியலூர் மாவட்டம், கார்குடியைச் சேர்ந்த சிவசந்திரன் குடும்பத்தினரைச் சந்தித்த நடிகர் ரோபோ சங்கர் ஆறுதல் கூறி ரூபாய் 1 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

                                       சி.ஆர்.பி.எஃப்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுவதற்கு முன் நடிகர் ரோபோ சங்கர், எடுத்த எடுப்பிலேயே ஒருசில நிபந்தனைகளை வைத்துவிட்டுப் பேசத்தொடங்கினார். ``நான் சினிமாக்காரன். என்னிடம் சினிமா சார்ந்த விஷயங்களை இவ்விடத்தில் எதுவும் கேட்கவேண்டாம். நம்மைக் காத்த தெய்வத்தின் வீட்டிற்கு வந்திருக்கிறேன். என் மனதில் உள்ளவற்றை மட்டும் பேசிவிட்டுச் செல்கிறேன். மறுகேள்வி கேட்காதீர்கள் ஃப்ளீஸ்" என்று பேசத்தொடங்கினார். ``இன்றைக்கு நாம் குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கிறோம் என்றால் அதற்கு இவர்களைப் போன்ற எல்லைசாமிகள்தான் காரணம்.

                                             

இன்றைக்கு நமது தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு வீரர்களை நாம் இழந்து நிற்கிறோம். இது ஈடுகட்ட முடியாத இழப்பாகும். இக்குடும்பத்துக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்பதே தெரியவில்லை. சிவசந்திரனால் மட்டுமே இக்குடும்பம் இயங்கிக்கொண்டிருக்கிறது. அவர் பிரிவு என்பது ஈடுசெய்ய முடியாதது. இந்தக் குடும்பத்துக்கு என்னால் ஆன சிறு உதவியை வழங்க எண்ணினேன். அதனால் இன்று கார்குடி கிராமத்துக்கு நேரில் வந்து குடும்பத்துக்கு ஆறுதல் கூறி என்னால் ஆன சிறு உதவியை வழங்கினேன். அவரது தாயாரிடம் பேசும்போது என் மகன் நாட்டுக்காக உயிரை விட்டுள்ளார். அது எனக்குப் பெருமைதான் என அவர் தாய் கூறும்போது பெருமையாக இருக்கிறது. இறந்துபோன 40 ராணுவ வீரர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்து கொள்வோம். தற்போது சுப்பிரமணியன் ஊருக்குச் செல்கிறேன்" என்று முடித்துக்கொண்டார்.


[X] Close

[X] Close