`பெர்ஃபாமராக இருக்கவே விரும்புகிறேன்!’ - கோலிவுட்டில் அறிமுகமாகும் அருண் பாண்டியன் மகள் | Arun Pandian's Daughter Keerthi pandian going to do her debut film in Tamil

வெளியிடப்பட்ட நேரம்: 20:41 (18/02/2019)

கடைசி தொடர்பு:20:41 (18/02/2019)

`பெர்ஃபாமராக இருக்கவே விரும்புகிறேன்!’ - கோலிவுட்டில் அறிமுகமாகும் அருண் பாண்டியன் மகள்

பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் தற்போது சினிமாவில் கதாநாயகியாக   அறிமுகமாகவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கனா படத்தில் நடித்த தர்ஷன் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். அறிமுக இயக்குநர் ஹரிஷ் ராம் LH என்பவர்  படத்தை இயக்குகிறார். 

கீர்த்தி பாண்டியன்

அட்வென்ச்சர் ஜானரில் உருவாகும் படம்  குறித்து பேசிய கீர்த்தி கூறியதாவது, ``கடந்த 5 வருடங்களாக நான் என் அப்பாவின் வியாபாரத்திற்கு உதவிகரமாக இருந்து வருகிறேன். சினிமா சம்பந்தமாக கம்பெனி ஒன்றைச் சொந்தமாக சிங்கப்பூரில் நடத்தி வருகிறேன். நடிப்பில் எனக்கு சிறு வயதிலிருந்தே ஆர்வம் அதிகம். கடந்த மூன்று வருடங்களாக தியேட்டர் ஆர்டிஸ்டாகவும் இருக்கிறேன். சினிமாவில் காலடி எடுத்துவைத்த பிறகு அது சம்பந்தமாக நிறைய கத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தேன்.

எனக்கு நிறைய சினிமா வாய்ப்புகள் இதற்கு முன்பு வந்திருக்கின்றன. அதில் சில படங்கள் ரிலீசாகி ஹிட்டாகவும் ஆகியிருக்கின்றன. அந்தப் படங்களில் நடிக்காததற்குக் காரணம் நடிகைகளுக்குப் பெரிதாக நடிக்க வாய்ப்பில்லாததுதான். என்னை ஒரு பர்ஃபார்மர் மற்றும் நடிகை என்றுதான் மற்றவர்கள் அழைக்க வேண்டும் என்று நினைக்கிறேனே தவிர, ஹீரோயின் எனும் பெயரை நான் விரும்பவில்லை. தற்போது நான் நடித்துக்கொண்டிருக்கும் படம் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான சிறந்த என்டர்டெயினராக இருக்கும். இதன் ஷூட்டிங் முடியும் தருவாயில் இருக்கிறது’’ என்று அவர் கூறியிருக்கிறார். 


[X] Close

[X] Close