சிறுமி பாலியல் பலாத்காரம் ராணுவ வீரர் கைது! | Sexual abuse, military man attested

வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (19/02/2019)

கடைசி தொடர்பு:00:00 (19/02/2019)

சிறுமி பாலியல் பலாத்காரம் ராணுவ வீரர் கைது!

15 வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குன்னூரைச் சேர்ந்த ராணுவ வீரர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது

குன்னூர் கிளப் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் தோனூஸ். இவரது மகன் கிறிஸ்டோபர்(27).  இவர் இந்திய ராணுவத்தில் ராணுவ வீரராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 2012-ம் ஆண்டு முதல் ஜம்மு-காஷ்மீர் பகுதியில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த வாரம் விடுப்பில் வந்துள்ளார். பின், கடந்த 15ம் தேதி குன்னூர் வண்ணாரப் பேட்டை பகுதியைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமியை அழைத்துக்கொண்டு வேளாங்கண்ணி சென்றுள்ளார். சிறுமி காணவில்லை எனப் பெற்றோர்கள் அப்பர்குன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதைத்  தொடர்ந்து பெண்ணை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட போது, அவர்கள் வேளாங்கண்ணியில் உள்ளது தெரிய வந்துள்ளது. அவர்களை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில், 15 சிறுமியை ஆசை வார்த்தை கூறி வேளாங்கண்ணி அழைத்துச் சென்று கிறிஸ்டோபர் பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து குன்னூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, கிறிஸ்டோபரை போக்சோ சட்டத்தில் போலீஸார் கைது செய்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close