`இது மக்கள் நலக் கூட்டணி!’ - அ.தி.மு.க கூட்டணி குறித்து ராமதாஸ் விளக்கம் | PMK founder ramadoss talks about admk alliance

வெளியிடப்பட்ட நேரம்: 12:14 (19/02/2019)

கடைசி தொடர்பு:14:44 (19/02/2019)

`இது மக்கள் நலக் கூட்டணி!’ - அ.தி.மு.க கூட்டணி குறித்து ராமதாஸ் விளக்கம்

சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் கூடிய அ.தி.மு.க, பா.ம.க தலைவர்கள் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணியை இறுதி செய்தனர். அதன்படி, 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க - பா.ம.க மெகா கூட்டணியாக இணைந்து தமிழகத்திலும், புதுச்சேரியிலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்தக் கூட்டணியில் பா.ம.க-வுக்கு ஏழு மக்களவை இடங்களும், ஒரு மாநிலங்களைவை இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பா.ம.க போட்டியிடும் ஏழு தொகுதிகளும் எந்தெந்த தொகுதிகள் என்பதைப் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அ.தி.மு.க - பா.ம.க

இதற்கிடையே, அ.தி.மு.க-வுடன் ஏன் கூட்டணி அமைக்கப்பட்டது என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார். அதில், ``இந்தக் கூட்டணி ஒரு மக்கள் நலக் கூட்டணி மட்டுமல்ல ஒரு மெகா கூட்டணி. இது ஆரம்பம் தான். தேர்தலில் மெகா கூட்டணியாக வெற்றிக்கூட்டணியாக மாறும். புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் இந்தக் கூட்டணி வெற்றிபெறும். அ.தி.மு.க கூட்டணி வைப்பதற்கு சில கோரிக்கைகளை வைத்தோம். மக்கள் நலனுக்காகத் தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுப்பதற்காக பத்து கோரிக்கைகளை வைத்திருந்தோம். அதை முதல்வர், துணை முதல்வரிடம் கொடுத்துள்ளோம். 

கூட்டணி உடன்படிக்கை

அவை, ``காவிரி பாசன மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மாவட்டமாக அறிவிக்க வேண்டும். கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம் உள்ளிட்ட நீர்ப் பாசன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாட்டில் சாதி வாரிய கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும். தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும். அதேபோல் தமிழகத்தில் படிப்படியாக மணல் குவாரிகளை மூட வேண்டும். தமிழக அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மேக்கே தாட்டூ அணைக் கட்டும் கர்நாடகாவின் முயற்சியை முறியடிக்க வேண்டும். பொதுத்துறை, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய வங்கிக் கடன்களை ரத்து செய்ய வேண்டும்.

ராமதாஸ்

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்" போன்ற கோரிக்கைகளை கூட்டணி சேரும்போது முன்வைத்தோம். இந்த கோரிக்கைகளுக்கு இரண்டு கட்சிகளிலும் ஆதரவு இருக்கிறது என்ற அடிப்படையிலேயே கூட்டணி அமைத்திருக்கிறோம்" என்றார் ராமதாஸ். அதேபோல், காவிரி, மேக்கே தாட்டூ அணை, எழுவர் விடுதலை கோரிக்கைகள் குறித்துப் பேசும்போது, அ.தி.மு.க அதற்கான நடவடிக்கைகளை எடுத்திருந்தது மேற்கோள் காட்டினார் ராமதாஸ்.

ராமதாஸ்

அதேபோல் அ.தி.மு.க-வுடன் ஏன் கூட்டணி அமைக்கப்பட்டது என்பது குறித்து விரிவாகத் தனியாக அன்புமணி ராமதாஸ் பேட்டி கொடுப்பார். அத்தனை கேள்விகளுக்கும் அன்புமணி அந்த செய்தியாளர் சந்திப்பில் விரிவாகப் பதிலளிப்பார் என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close