`லவ் பண்ணினேன்... ஆனால், மேரேஜ் பண்ணல!' - நடிகை அதிதி மேனன் ஓப்பன் டாக் | actress adhiti menon speaks about police complaint against actor abi saravanan

வெளியிடப்பட்ட நேரம்: 12:47 (19/02/2019)

கடைசி தொடர்பு:12:47 (19/02/2019)

`லவ் பண்ணினேன்... ஆனால், மேரேஜ் பண்ணல!' - நடிகை அதிதி மேனன் ஓப்பன் டாக்

நடிகை அதிதிமேனன்

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த நடிகை அதிதி மேனன், ``நடிகர் அபி சரவணனை லவ் பண்ணினேன் ஆனால் மேரேஜ் பண்ணவில்லை'' எனக் கூறினார். 

`பட்டதாரி' படத்தில் கதாநாயகனாக நடித்த சென்னையைச் சேர்ந்த சரவணன் என்கிற அபி சரவணன் காரில் கடத்தப்பட்டதாக  கடந்த சில தினங்களுக்கு முன் தகவல் வெளியானது. அதுகுறித்து போலீஸார் விசாரித்துக் கொண்டிருக்கும்போதே அபிசரவணன், வீடு திரும்பினார். இதனால் கடத்தல் சம்பவம் முடிவுக்கு வந்தது.  இந்த நிலையில், `பட்டதாரி' படத்தில் கதாநாயகியாக நடித்த  நடிகை அதிதி மேனன் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து நடிகர் அபி சரவணன் மீது புகார் கொடுத்தார். 

இதுகுறித்து நடிகை அதிதிமேனன் கூறுகையில், ``கடந்த 2016-ல் ஹீரோயினாக `பட்டதாரி' படத்தில் நடித்தேன். அந்தப்படத்தில் ஹீரோவாக அபி சரவணன் நடித்தார். அப்போதுதான் எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. அபி சரவணனை நான் காதலித்தேன். ஆனால், அவரை திருமணம் செய்யவில்லை. அதற்குள் எங்கள் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் பிரிந்துவிட்டோம். 

இந்தச் சூழ்நிலையில் கடந்த சில மாதங்களாக அபிசரவணன், என்னைக் குறித்து தவறான தகவல்களை பரப்பிவருகிறார். நானும் அவரும் பதிவுத் திருமணம் செய்துகொண்டதாக போலியாக ஒரு சான்றிதழை வைத்துள்ளார். அது தொடர்பாக மதுரை நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. 

 நடிகை அதிதிமேனன்

அடுத்து, கடந்த ஜனவரி மாதத்தில் என்னுடைய ட்விட்டர் பக்கத்தை ஹேக் செய்து சில முக்கிய தகவல்கள் திருடப்பட்டுள்ளன. அதற்கு காரணமும் அபி சரவணன்தான். மேலும், நான் போரூரில் உள் அப்பார்ட்மென்டில் தங்கியிருந்த சமயத்தில் என்னைத் தாக்க முயற்சி நடந்தது. என்னுடைய ட்விட்டர் கணக்கை ஹேக் செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸில் புகார் கொடுத்துள்ளேன். என்னைப் பற்றி அவதூறு கருத்துகளை பரப்பியது தொடர்பாகவும் புகார் கொடுத்துள்ளேன். நான் கொடுத்த புகார்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்" என்றார். 

 உங்களுக்குள் ஏன் பிரிவு ஏற்பட்டது? 

``ஜல்லிக்கட்டு, விவசாயிகள் போராட்டம் நடந்தசமயத்தில் அபிசரவணன் நிதிதிரட்டினார். அந்தப்பணத்தை அவர் மோசடி செய்தார். இந்தத் தகவல் எனக்கு தெரிந்ததும் அவரைத் தட்டிக் கேட்டேன். மேலும், மோசடியில் ஈடுபடும் அவருடன் நான் இருந்தால் என் மீதும் குற்றச்சாட்டப்படும். மேலும், அபி சரவணன் நடித்த முதல் படத்தின் ஹீரோயினையும் அவர் ஏமாற்றியுள்ளார். இதனால்தான் அவரை விட்டுப் பிரிந்தேன். தற்போது அவர், இல்லாமல் நான் வளர்ந்துவிடக்கூடாது என்பதற்காக சில தகவல்களைப் பரப்பிவருகிறார். இந்தத் தகவல் எனக்கு மட்டுமல்ல, என்னைச் சுற்றியுள்ளவர்களையும் பாதிப்படைய வைக்கிறது. அபி சரவணன் என் மீது புகார் பரப்பிய சமயத்தில் அமைதியாக இருந்தேன். அவரை காரில் கடத்திய சம்பவத்துக்கு நான் காரணம் என்ற தகவல் வெளியானது. இதனால்தான் போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளேன்". 

நடிகை அதிதிமேனன்

 திருமணம் செய்துகொள்ளாமல் இருவரும் சேர்ந்து வாழ்ந்ததாக அபிசரவணன் கூறுகிறாரே? 

 ``அது பொய். என்னைத் திருமணம் செய்துகொள்ள அபி சரவணனின் குடும்பத்தினரும் ஆதரவு தெரிவித்தனர். ஆனால், அதற்குள் அவர் குறித்த தகவல்கள் எனக்குத் தெரிந்துவிட்டது. நானும் அவரும் சினிமா ஷூட்டிங்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களைத்தான் வெளியிட்டுவருகிறார்" 

நடிகர் அபிசரவணனை தொடர்புகொண்டபோது அவர் பதிலளிக்கவில்லை. அவரின் விளக்கத்தையும் பரிசீலனைக்குப்பிறகு வெளியிட தயாராக உள்ளோம். 

அபிசரவணன் கடத்தல் வழக்கை விசாரித்த வளசரவாக்கம் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியிடம் பேசினோம். ``அபிசரவணனை காரில் கடத்தியதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் நாங்கள் விசாரித்தோம். சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வுசெய்த சமயத்தில் வீடு திரும்பினார் அபி சரவணன். இதையடுத்து அவரிடம் விசாரித்தபோது தன்னை யாரும் கடத்தவில்லை. தவறுதலாக தன்னுடைய தந்தை கடத்திவிட்டதாகக் கூறிவிட்டார் என்று கூறினார். இதனால் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை" என்றார். 


[X] Close

[X] Close