காக்னிசென்ட் நிறுவனத்திடம் லஞ்சம் வாங்கியது யார்? - அமெரிக்க ஆவணம் சொல்வது என்ன | US documents indict CMDA and TN govt official for $ 2 million bribe case

வெளியிடப்பட்ட நேரம்: 13:01 (19/02/2019)

கடைசி தொடர்பு:13:01 (19/02/2019)

காக்னிசென்ட் நிறுவனத்திடம் லஞ்சம் வாங்கியது யார்? - அமெரிக்க ஆவணம் சொல்வது என்ன

சென்னை  சோழிங்கநல்லூரில் உள்ள கே.ஐ.டி.எஸ் வளாகத்தில் 27 லட்சம் சதுர அடியில் கட்டடம் கட்ட காக்னிசென்ட் தீர்மானித்துள்ளது. இதற்கு அனுமதி வழங்கத்  தமிழக அரசு அதிகாரிகள் மூன்று பேருக்கு ரூ.14 கோடி வரை லஞ்சம் வழங்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எல் அண்டு டி லஞ்சம் கொடுத்ததாகக் குற்றச்சாட்டு

காக்னிசென்ட் நிறுவனத்தின் அப்போதைய தலைவர் கார்டன் கோபார்ன், தலைமை சட்டத்துறை அதிகாரி ஸ்டீபன் ஸ்குவார்ட்ஸ் ஆகியோரின் உத்தரவின் பேரில், கட்டுமான நிறுவனமே லஞ்சத்தைக் கொடுத்துள்ளது. காக்னிசென்ட் நிறுவனம் அமெரிக்காவைச் சேர்ந்தது. அமெரிக்க சட்டப்படி, வெளிநாட்டில் நிறுவனம் இயங்கி வந்தாலும் லஞ்சம் கொடுப்பதும் பெறுவதும் சட்டத்துக்குப் புறம்பானது. லஞ்சம் கொடுத்த தொகையை காக்னிசென்ட் நிறுவனம், கட்டுமானச் செலவில் கணக்குக் காட்டி ஈடு செய்துள்ளது. இதுதொடர்பாக காக்னிசென்ட் நிறுவனத்துக்கு அமெரிக்க பங்கு வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தும் அமைப்பு ரூ.200 கோடி அபராதம் விதித்துள்ளது. 

காக்னிசென்ட் நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் வாங்கிய தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரிகளின் பெயர்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால், 2014-ம் ஆண்டு சென்னை மாநராட்சி மேம்பாட்டு ஆணையத்தின் (சிஎம்டிஏ) உறுப்பினர் செயலராக ஏ.கார்த்திக் ஐ.ஏ.எஸ் இருந்துள்ளார். இந்தச் சமயத்தில்தான் லஞ்சம் வழங்கப்பட்டுள்ளது. வீட்டு வசதி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக ஆர்.வைத்திலிங்கம் இருந்துள்ளார். கார்த்திக் ஐ.ஏ.எஸ் இந்த விவகாரம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று மறுத்துள்ளார். காக்னிசென்ட் நிறுவனத்துக்குக் கட்டடம் கட்டிக் கொடுத்தது எல் அண்டு டி நிறுவனம் என்பதும் தெரியவந்துள்ளது. 

காக்னிசென்ட் மீது லஞ்சப்புகார்

எல் அண்டு டி நிறுவனமும் இந்தத் தகவலை மறுத்துள்ளது. `தங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த எந்த அதிகாரியும் தமிழக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கவில்லை’ என்று அந்த நிறுவனம் கூறுகிறது. தி.மு.க தலைவர் ஸ்டாலின்,  இந்த விவகாரத்தில் ரூ. 26 கோடி வரை லஞ்சப்பணம் கைமாறியுள்ளதாகவும் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close