விவசாயிகள் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! | Today is the last date for applying central government announced incentive for farmers

வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (19/02/2019)

கடைசி தொடர்பு:13:20 (19/02/2019)

விவசாயிகள் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

த்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில், பிரதான் மந்திரி கிஷன் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இரண்டு ஹெக்டேர் அல்லது அதற்குக் குறைவான நிலமிருந்தால் ஆண்டுக்கு 6,000 ரூபாய் வழங்கப்படும் என்றும் இந்தத் தொகை நேரடியாக விவசாயியின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் அறிவித்தது மத்திய அரசு. அதற்கான வேலைகளிலும் இறங்க ஆரம்பித்தது. இந்த உதவித் தொகையை பெறுவதற்கான தகுதிகள் வெளியிடப்பட்டு விவசாயிகளின் விண்ணப்பங்கள் வாங்கப்பட்டு வந்தன. 

விவசாயிகள்

இதற்கான விண்ணப்பங்கள் பெற இன்றே கடைசி நாளாகும். இதுவரை பெறப்பட்டுள்ள விண்ணப்பங்களில் தகுதி வாய்ந்த விவசாயிகளின் பட்டியல் அந்தந்த கிராம நிர்வாக அலுவலகத்தில் தயாராக இருக்கின்றன. அதனால் சிறு, குறு விவசாயிகள் தகுதியுடையவராக இருப்பின், தங்களது பெயர்கள் விடுபட்டிருந்தால் விண்ணப்பித்துக்கொள்ளலாம். விவசாயி, விவசாய நிலத்தின் பட்டா நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வங்கிக் கணக்கு நகல், மொபைல் எண் ஆகியவற்றை முறையாக வழங்க வேண்டும். இந்தத் திட்டத்துக்காக மொத்தம் 75,000 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. 

ஊக்கத்தொகை பெற மத்திய அரசு வெளியிட்டுள்ள விவசாயியின் தகுதிகள் போதுமானதாக இல்லை என்று முன்னரே விவசாய சங்கப் பிரதிநிதிகள் தங்கள் அதிருப்தியை வெளியிட்டிருந்தனர். 

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உத்தரப் பிரதேச மாநிலத்தில் கோரக்பூர் நகரில் நடைபெறும் இரண்டு நாள் விவசாயிகள் மாநாடு நிகழ்ச்சியின்போது, பிப்ரவரி 24-ம் தேதி முதல் கட்ட தவணையும், ஏப்ரல் 1-ம் தேதி இரண்டாவது தவணையும் வழங்கப்பட இருப்பதும் குறிப்பிடத்தக்கது. 


[X] Close

[X] Close