ராகு காலம் முடிந்தவுடன் பா.ஜ.க கூட்டணி அறிவிப்பு? | bjp alliance will be announce soon

வெளியிடப்பட்ட நேரம்: 13:28 (19/02/2019)

கடைசி தொடர்பு:13:55 (19/02/2019)

ராகு காலம் முடிந்தவுடன் பா.ஜ.க கூட்டணி அறிவிப்பு?

தமிழக அரசியலும் ஜோதிடமும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் போலாகிவிட்டன. இந்துக்களால் புனித நாளாகக் கொண்டாடப்படும் மாசி மகமான இன்று, ஆயில்யம் நட்சத்திரம் முடிந்து மகம் நட்சத்திரம் தொடங்கிய பின்னர், அ.தி.மு.க - பா.ம.க கூட்டணி உடன்படிக்கை கையெழுத்தானது. மகம் நட்சத்திரப்படி இன்று ஜெயலலிதாவின் பிறந்தநாளும்கூட.

பியூஷ் கோயல்

இதே ரூட்டில் தே.மு.தி.க, பா.ஜ.க இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அவசரப் பயணமாக சென்னை வந்துள்ள மத்திய அமைச்சரும் தமிழக பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளருமான பியூஷ் கோயல், மதியம் 1.30 மணிக்கு குளிகை முடிந்தவுடன் இரண்டு மணியளவில் விஜயகாந்த்தை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துகிறாராம். 

பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக, மாலை 4.30 மணிக்கு மேல் ராகுகாலம் முடிந்தவுடன், பா.ஜ.க கூட்டணியில் இடம்பெறவுள்ள கட்சிகளை பியூஷ் கோயல் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. அதுசமயம் அ.தி.மு.க தலைவர்களும் பியூஷ் கோயலுடன் செய்தியாளர்களைச் சந்திப்பார்களாம். கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளை மட்டும் முதலில் அறிவிப்பதாகவும் தொகுதிகளைப் பிரிப்பது தொடர்பான பேச்சுவார்த்தையை இன்னும் சில நாள்களில் முடித்துவிட்டு வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்படும் என்று பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


[X] Close

[X] Close