சென்னை வந்தார் பியூஷ் கோயல் - பா.ம.க-வை அடுத்து பா.ஜ.க கூட்டணியை இறுதி செய்யும் அ.தி.மு.க! | admk and bjp begins alliance talk in chennai

வெளியிடப்பட்ட நேரம்: 13:51 (19/02/2019)

கடைசி தொடர்பு:14:43 (19/02/2019)

சென்னை வந்தார் பியூஷ் கோயல் - பா.ம.க-வை அடுத்து பா.ஜ.க கூட்டணியை இறுதி செய்யும் அ.தி.மு.க!

பா.ம.கவை அடுத்து பா.ஜ.க கூட்டணியை இறுதி செய்யும் வேலைகளில் தீவிரமடைந்துள்ளது அ.தி.மு.க.

பியூஷ் கோயல்

சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் கூடிய அ.தி.மு.க, பா.ம.க தலைவர்கள் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணியை இறுதி செய்தனர். அதன்படி, 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க - பா.ம.க மெகா கூட்டணியாக இணைந்து தமிழகத்திலும், புதுச்சேரியிலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்தக் கூட்டணியில் பா.ம.க-வுக்கு 7 மக்களவை இடங்களும், ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன. 

பியூஷ் கோயல்

பா.ம.க கூட்டணி இறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் பா.ஜ.க தலைவர்கள் கிரவுன் பிளாசா ஹோட்டலுக்கு வந்துள்ளனர். அவருடன் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன்வந்துள்ளனர். இரு கட்சிகளும் கூட்டணி ஒப்பந்தத்தில் விரைவில் கையொப்பமிடுவார்கள் எனத் தெரிகிறது. முன்னதாக கூட்டணி பேச்சுவார்த்தையை இறுதி செய்வதற்கு பியூஷ் கோயலுடன் அமித் ஷா வருவதாக இருந்தது. ஆனால் திடீரென அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close