`திராவிடக் கட்சிகளோடு கூட்டணி!’ - அன்று என்ன சொன்னார் ராமதாஸ்? | Ramadoss statement regarding allaince with Dravidan movement

வெளியிடப்பட்ட நேரம்: 14:44 (19/02/2019)

கடைசி தொடர்பு:14:51 (19/02/2019)

`திராவிடக் கட்சிகளோடு கூட்டணி!’ - அன்று என்ன சொன்னார் ராமதாஸ்?

அ.தி.மு.க பா.ம.க கூட்டணியும் தொகுதிப் பங்கீடும் இன்று உறுதியாகிவிட்ட நிலையில் சமூக வலைதளங்களில் இதுகுறித்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

ராமதாஸ்

இதன் இன்னொருபுறம் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் திராவிடக் கட்சிகளை விமர்சித்துப் பேசிய காணொலிகளும் அவருடைய அறிக்கைகளும் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. அதில் கடந்த வருடம் பத்திரிகையாளர் சந்திப்பின்போது திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி குறித்த கேள்வியின்போது ராமதாஸ் ``கார் உள்ளளவும் கடல்நீர் உள்ளளவும் பார் உள்ளளவும் பைந்தமிழ் உள்ளளவும் திமுகவுடனும் அண்ணா திமுகவுடனும் கூட்டணி இல்லை. எத்தனை முறை இதை உங்களுக்கு சொல்வது? ஒரு பத்திரத்தில் வேண்டுமென்றால் கையெழுத்துப் போட்டுத் தரட்டுமா’’ எனக் கேள்வி கேட்டார். அவர் பேசிய அந்தக் காணொலி அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 

பினாமி, பணந்தின்னி, கொள்ளையர்கள் என எடப்பாடி பழனிசாமி அரசைத் தொடர்ந்து விமர்சித்து வந்தவர் ராமதாஸ். அதேபோலவே, அன்புமணியும் திராவிடக் கட்சிகளைக் கடுமையாக விமர்சித்தார். அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நண்பனும் இல்லை என்கிற கூற்று மக்களுக்குத் தெரிந்திருந்தாலும்  கூட்டணி முடிவுகள் மேலும் தெரியவர அரசியல் தலைவர்களின் பழைய அறிக்கைகளை இணையவாசிகள் இன்னும் கிளறுவார்கள் என்பதில் ஐயமில்லை.


[X] Close

[X] Close