`நான்தான் உங்கள் காலில் விழ வேண்டும்' - சிவசந்திரன் குடும்பத்தை நெகிழவைத்த ஜெயானந்த்! | jeyananth divakaran visits crpf solider ariyalur siva chandrans house

வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (19/02/2019)

கடைசி தொடர்பு:15:10 (19/02/2019)

`நான்தான் உங்கள் காலில் விழ வேண்டும்' - சிவசந்திரன் குடும்பத்தை நெகிழவைத்த ஜெயானந்த்!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டம், அவாந்திபோரா பகுதியில் கடந்த 14-ம் தேதியன்று பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில், 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள சவலாப்பேரியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் அரியலூர் மாவட்டம், கார்குடியைச் சேர்ந்த சின்னையன் என்பவரின் மகன் சிவசந்திரன் என்பவரும் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்துக்கு ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. வீரமரணமடைந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் உடல்கள், 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம்செய்யப்பட்டன. 

ஜெயானந்த்

இந்த நிலையில், குண்டுவெடிப்பில் இறந்த அரியலூர் மாவட்டம் கார்குடியைச் சேர்ந்த சிவசந்திரன் குடும்பத்தினரைச் சந்தித்துள்ளார் ஜெயானந்த் திவாகரன். இதுகுறித்து அவரது ஆதரவாளர்கள் கூறும்போது, தீவிரவாதத் தாக்குதலில் நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த சிவசந்திரன் குடும்பத்துக்கு உதவும் வகையில், அவரின் மனைவியிடம் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார் ஜெயானந்த். அதுமட்டுமில்லாமல், ``உதவி தேவைப்பட்டால் எப்போது வேண்டுமானாலும் என்னை அழையுங்கள். எந்த உதவி வேண்டுமானாலும் செய்கிறேன்" என்று தனது செல்போன் நம்பரையும் கொடுத்து ஆறுதல் கூறினார். 

ஜெயானந்த் திவாகரன்

அவர் கூறிய வார்த்தைகளைக் கேட்டு சிவசந்திரன் மனைவி ஜெயானந்த் திவாகரன் காலில் விழ முற்பட்டபோது, அவரைத் தடுத்து நாங்கள்தான் ஒரு நாட்டுக்காகத் தியாகம் செய்தவர் மனைவியின் காலில் விழ வேண்டும் என்று காலில் விழுந்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியைக் கண்டு அங்கு உள்ள எல்லோரும் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில், இந்த சிறு வயதில் இவ்வளவு எளிமையாக நடந்துகொள்கிறார் என அங்கிருந்த பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close