`நடனம் ஆடும்போது உயிர் பிரிய வேண்டும்!’ - `கலை இளமணி’ விருது பெற்ற ஏஞ்சலின் | successful woman angelin, who got a " kalai ila mani" award from tamilnadu goverment

வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (19/02/2019)

கடைசி தொடர்பு:16:15 (19/02/2019)

`நடனம் ஆடும்போது உயிர் பிரிய வேண்டும்!’ - `கலை இளமணி’ விருது பெற்ற ஏஞ்சலின்

பிறப்பிலேயே அட்ரினல் சுரப்பி இல்லாமல் பிறந்த ஏஞ்சலின், பரதத்திற்கான 'கலை இளமணி' விருதை அமைச்சர் எம்.சி.சம்பத்திடம் பெற்றுள்ளார்

டலூர் மாவட்டத்தில், பிப்ரவரி 17-ம் தேதி, தமிழக அரசின் சார்பாக `கலை விருது வழங்கும் விழா’ நடத்தப்பட்டது. இந்த விழாவில், பிறப்பிலேயே அட்ரினல் சுரப்பி இல்லாமல் பிறந்த ஏஞ்சலின், பரதத்திற்கான `கலை இளமணி’ விருதை  அமைச்சர் எம்.சி.சம்பத்திடமிருந்து  பெற்றுள்ளார்.

ஏஞ்சலின்

இதுகுறித்து ஏஞ்சலினிடம் பேசினோம். ``பிறப்பிலேயே எனக்கு சில குறைபாடு இருந்தாலும் அதை மறந்து, என்னை அடையாளப்படுத்திக்கொள்ள 17 வருடங்களாகப் போராடிவருகிறேன். அரசின் இந்த விருதை என் நம்பிக்கைக்கான பரிசாகத்தான் பார்க்கிறேன். ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது’’என்றவர், எதிர்கால திட்டங்களைப் பகிர்கிறார்.

கலை இளமணி

``பரதத்தை அடுத்து பொய்க்கால் ஆட்டம், கரகம், சிலம்பம் எனத் தமிழர்களின் பாரம்பர்யக் கலைகளில் 60 கலைகளை முறைப்படி பயின்றுள்ளேன். நம் பாரம்பர்யக் கலைகளைக் கற்றுக்கொடுக்கத்தான் யாரும் முன்வருவதில்லை. அதனால், அழிந்துவரும் பாரம்பர்யக் கலைகளுக்கு உயிர் கொடுத்து, அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதை என்  லட்சியமாகக் கொண்டு செயல்பட்டுவருகிறேன். அதன் முதல் கட்டமாக, அரசுப் பள்ளி மாணவர்கள், திருநங்கைகளுக்கு இலவசமாக நடனப் பயிற்சி வகுப்புகள் எடுத்துவருகிறேன். அடுத்த கட்டமாக, கிராமம் கிராமமாகச் சென்று இலவசமாக பாரம்பர்யக் கலைக்கான பயிற்சி வகுப்புகள் எடுக்கும் திட்டமும் உள்ளது. என் மரணம் எப்போது என்று தெரியாது. அது எப்போது நிகழ்ந்தாலும், நடனம் ஆடும்போது நிகழ வேண்டும்" என்கிறார் புன்சிரிப்பு பொங்க.


[X] Close

[X] Close