சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ - பிளாக் ஷீப் குழு படத்தின் அப்டேட் | Sivakarthikeyan Production's next movie directed by Black sheep Team!

வெளியிடப்பட்ட நேரம்: 16:45 (19/02/2019)

கடைசி தொடர்பு:21:26 (19/02/2019)

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ - பிளாக் ஷீப் குழு படத்தின் அப்டேட்

சின்னத்திரை பிரபலம் ரியோ கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தை பிளாக் ஷீப் யூடியூப் டீம் இயக்கிவருகிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சத்யராஜ் நடித்து வெளியான 'கனா' படத்தைத் தொடர்ந்து, இப்படத்தை சிவகார்த்தியேகன் தயாரிக்கிறார். ரியோ, ஷிரின், ராதாராவி, நாஞ்சில் சம்பத் மற்றும் ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் ஆகியோர் நடிப்பில் உருவாகிவரும் இப்படம், இறுதிக்கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளது. இந்நிலையில், படத்தின் டப்பிங் பணிகள் இன்று துவங்கியுள்ளன. 

பிளாக் ஷீப்

இதுகுறித்து படத்தின் இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் கூறியது, "எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி தெரிவிப்பதைத் தவிர வேறு எதையும் என்னால் சிந்திக்க முடியவில்லை. வாய்ப்பு அளித்ததையும் தாண்டி, அவர் எங்களை ஊக்கப்படுத்தியதும், படைப்பு சுதந்திரத்தில் எந்தக் கட்டுப்பாடும் விதிக்காமல் முழுச் சுதந்திரத்தை கொடுத்ததும், படத்தை மிகச் சிறப்பாகக் கொண்டுசெல்ல உற்சாகம் அளித்தது. இப்போது, படப்பிடிப்பின் இறுதிக்கட்டத்தில் இருக்கிறோம். அதேசமயம், டப்பிங் பணிகளையும்  தொடங்கியிருக்கிறோம்.

Sivakarthikeyan- Rio

ரியோ, ஏற்கெனவே ஒவ்வொரு வீட்டிலும் மிகவும் விரும்பப்படும் நபராக மாறிவிட்டார். நான், அவருடன் பணிபுரிந்த வரை அவரின் அர்ப்பணிப்பும், சிறப்பானதை வழங்குவதில் அவரின் உறுதியும் என்னை ஆச்சர்யப்படுத்தியது. அதுபோலவே, நடிகை ஷிரினும் சிறப்பாக நடித்துள்ளார். ராதாரவி சார் எங்கள் படத்தில் நடிக்க வந்தது எங்கள் அதிர்ஷ்டம். நாஞ்சில் சம்பத் சார் எங்கள் படத்துக்கு ஒரு வைரக்கல். நான் சில நேரங்களில், நாஞ்சில் சம்பத் சாரின் எளிமையான மற்றும் நேர்மையான வாழ்க்கையைப் பார்த்து மிகவும் அதிர்ச்சி அடைந்திருக்கிறேன். நிச்சயமாக, ஆர்.ஜே.விக்னேஷ்காந்தும் அவர் பங்குக்கு நகைச்சுவை விஷயங்களை அளித்திருக்கிறார்" என்றார். இப்படத்தின் பெயர், 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு' என்று வைக்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close