வெப் சீரிஸில் அபிஷேக் பச்சனுடன் கைகோக்கும் நித்யா மேனன்!  | Nithya Menon acts in Breathe web series along with Abisheik bachchan!

வெளியிடப்பட்ட நேரம்: 17:39 (19/02/2019)

கடைசி தொடர்பு:17:39 (19/02/2019)

வெப் சீரிஸில் அபிஷேக் பச்சனுடன் கைகோக்கும் நித்யா மேனன்! 

மாதவன் நடித்து அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியான `ப்ரீத்' (Breathe) எனும் வெப் சீரீஸ் இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது. தற்போது, இதன் இரண்டாம் பாகம் தயாராகவிருக்கிறது. இதனை மாயான்க் ஷர்மா இயக்குகிறார். இதில் நித்யா மேனன் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற செய்தி வெளியாகியிருக்கிறது.

நித்யா மேனன்

சைக்காலஜிக்கல் த்ரில்லராக உருவாகிவரும் இந்த சீரீஸில் இன்னொரு முக்கியக் கதாபாத்திரத்தில் அபிஷேக் பச்சன் நடிக்கவிருக்கிறார். தவிர, முதல் பாகத்தில் நடித்த அமித் சத் இரண்டாம் பாகத்திலும் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடிக்கவிருக்கிறார். 

Abisheik Bachchan

நித்யா மேனன் தற்போது பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யும் `பிராணா' பட ஷூட்டிங்கில் இருக்கிறார். மலையாளத்தில் இயக்கப்பட்டு வரும் இத்திரைப்படம் தமிழ், கன்னடா, தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகவிருக்கிறது. ஒற்றைக் கதாபாத்திரத்தை மட்டுமே வைத்து எடுக்கக்கூடிய படம் என்பதனால் இதன் எதிர்பார்ப்பு சினிமா வட்டாரத்தில் கூடுதலாக இருக்கிறது. மேலும், `ப்ரீத்' (Breathe) வெப்-சீரீஸின் இரண்டாம் பாகம் சுமார் 200 நாடுகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவிப்பு விடுத்துள்ளது. 


[X] Close

[X] Close