`ரூ.300 கோடி நில விவகாரத்தில் தொடர்பில்லை!’ - உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்த அமைச்சர் வீரமணி | "We have not got Rs 300 crore land dealings!" - Minister Veeramani has filed the affidavit

வெளியிடப்பட்ட நேரம்: 20:10 (19/02/2019)

கடைசி தொடர்பு:20:10 (19/02/2019)

`ரூ.300 கோடி நில விவகாரத்தில் தொடர்பில்லை!’ - உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்த அமைச்சர் வீரமணி

``வேலூரில், பிரச்னைக்குரிய ரூ.300 கோடி நில விவகாரத்தில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லையென்று’’ சென்னை உயர்நீதிமன்றத்தில், அமைச்சர் கே.சி.வீரமணி தரப்பில் உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. 

அமைச்சர் கே.சி.வீரமணி

வேலூர் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ரூ.300 கோடி மதிப்பிலான 6 ஏக்கர் 90 சென்ட் நிலத்தை அபகரித்ததாகக் கூறப்படும் புகாரின் பின்னணியில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதுதொடர்பாக அமைச்சர் வீரமணி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் நண்பரும் தொழிலதிபருமான சேகர்ரெட்டி உள்ளிட்டோர் மீது காட்பாடியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர்கள் ராமமூர்த்தி, ஜெயப்பிரகாஷ் ஆகிய இருவரும் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் வேலூர் சார்பு நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடுத்திருந்தனர்.

கடந்த 12-ம் தேதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற இவ்வழக்கு விசாரணையின்போது, ``நில விவகாரத்தில் அமைச்சர் கே.சி.வீரமணியின் தலையீடு இல்லை’’ என்று அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். `உறுதிமொழி பத்திரம்’ தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், ``வேலூரில் உள்ள நில விவகாரத்தில் அமைச்சர் வீரமணிக்குத் தொடர்பில்லை. அவர், பதவியைப் பயன்படுத்தி கட்டப்பஞ்சாயத்து செய்யவில்லை’’ என்று அமைச்சரின் தரப்பில் உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, வழக்கு விசாரணை வரும் 25-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மனுதாரர்களில் ஒருவரான ஜெயப்பிரகாஷ் தெரிவித்திருக்கிறார்.


[X] Close

[X] Close