மோடியின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது! - பொன்.ராதாகிருஷ்ணன் ஆரூடம் | Having confidence in Modi, says Pon.Radhakrishnan

வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (19/02/2019)

கடைசி தொடர்பு:20:20 (19/02/2019)

மோடியின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது! - பொன்.ராதாகிருஷ்ணன் ஆரூடம்

நீங்கள் மோடியின் மீது வைத்திருந்த நம்பிக்கை வீண் போகாது. புல்வாமா தாக்குதலால் பாகிஸ்தான் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை மத்திய அரசு எடுக்கத் தொடங்கிவிட்டதாக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

                                                    

 

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 14-ம் தேதியன்று பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் இதுவரையிலும் 40-க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் வீரமரணமடைந்தனர். இதில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள சவலாப்பேரியைச் சேர்ந்த சுப்பிரமணியன், அரியலூர் மாவட்டம் கார்குடியைச் சேர்ந்த சின்னையன் என்பவரின் மகன் சிவசந்திரன் ஆகியோர் வீர மரணம் அடைந்தனர்.

                                                           

இக் கொடூரத் தாக்குதலைக் கண்டித்து உலக நாட்டுத் தலைவர்கள் தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் அரியலூர் மாவட்டம் கார்க்குடி கிராமத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்கு வந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சிவசந்திரனின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

                                                   

இதனையடுத்து குடும்பத்தாருடன் சிறிது நேரம் உரையாடிய பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தீவிரவாதிகளால் தாக்குதலுக்கு பலியான ராணுவ வீரர்களின் தியாகம் மகத்தானது. அதை நாம் போற்றப்பட வேண்டும் இதற்கு காரணமான பாகிஸ்தான் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை மத்திய அரசு எடுத்து வருகிறது.

                                                  

பிரதமர் மீதும் ராணுவத்தின் மீதும் வைத்துள்ள நம்பிக்கை பொய்க்காது. நாளை தமிழக முதல்வரைச் சந்திப்பதற்கான வாய்ப்பு உள்ளது. அப்போது உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பத்தார் குறித்து செய்ய வேண்டிய உதவிகள் குறித்துப் பேச உள்ளேன் வருங்காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் கூறினார்.


[X] Close

[X] Close