கிராமத்தில் நடக்கும் மீடூ பிரச்னைகளை யாரும் கண்டுகொள்வதில்லை! - மக்கள் சிவில் உரிமைக் கழகம் | sexual abuse problems faced by women in villages is unheard

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (19/02/2019)

கடைசி தொடர்பு:20:30 (19/02/2019)

கிராமத்தில் நடக்கும் மீடூ பிரச்னைகளை யாரும் கண்டுகொள்வதில்லை! - மக்கள் சிவில் உரிமைக் கழகம்

'கிராமப்புறங்களில் அரங்கேறும் பாலியல் பிரச்னைகளை யாரும் கண்டுகொள்வதில்லை' என மக்கள் சிவில் உரிமை கழகத்தைச் சார்ந்த முரளி உள்ளிட்டோர் குற்றம் சாட்டியுள்ளனர். 

 

 

 

மதுரையில், மக்கள் சிவில் உரிமை கழகத்தைச் சேர்ந்த முரளி மற்றும் அகில இந்திய  முற்போக்குப் பெண்கள் கழகம் மற்றும் அனைத்திந்திய விவசாய கிராமப்புறத் தொழிலாளர் சங்கத்தினர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில்," மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியத்துக்குட்பட்ட ராமையன்பட்டி ஊராட்சி எழுத்தராக ரேவதி என்பவர் பல ஆண்டுகளாகப் பணியாற்றிவருகிறார் ஆனால், அவருக்குப் பதிலாக அவரது கணவர் திருப்பதி தான் அப்பணியில் செயல்படுகிறார். இந்நிலையில், அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்ட அவர், 100 நாள் வேலைவாய்ப்புப் பணியின் பல்வேறு முறைகேடுகளைச் செய்துவருகிறார். முறையாக சம்பளம் வழங்காமலும், பெண்கள்மீது பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டும்வருகிறார். இது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்து, அவர்மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவர்மீது இந்தப் போடப்பட்ட எஃப்.ஐ.ஆர் வலுவாக இல்லை அதனால், நீதிமன்றத்திற்குச் செல்லும்போது தள்ளுபடிசெய்யப்படலாம்.

முரளி

எனவே, புகார் எழுந்துள்ள கிராமத்தில் முழுமையாக விசாரணை நடத்தி, அவர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால், தொடர்ந்து இதுபோல குற்றங்கள் நடைபெறும். சினிமா  பிரபலங்கள் உள்ளிட்டவர்களுக்கு நடைபெறும் மீடூ பிரச்னை பரபரப்பாகப் பேசப்படுகிறது. ஆனால், கிராமப்புறங்களில் தொடர்ந்து நடைபெறும் இதுபோன்ற புகார்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை என வேதனை தெரிவித்தனர் .


[X] Close

[X] Close