``மக்களின் நலனுக்காகத்தான் அ.தி.மு.க-வுடன் கூட்டணி"- பா.ம.க தேர்தல் பிரசாரக் குழுத் தலைவர் எதிரொலி மணியன் | ADMK PMK Alliance

வெளியிடப்பட்ட நேரம்: 20:50 (19/02/2019)

கடைசி தொடர்பு:20:57 (19/02/2019)

``மக்களின் நலனுக்காகத்தான் அ.தி.மு.க-வுடன் கூட்டணி"- பா.ம.க தேர்தல் பிரசாரக் குழுத் தலைவர் எதிரொலி மணியன்

பா.ம.க தலைவர் ராமதாஸும் அன்புமணி ராமதாஸும் திராவிடக் கட்சிகள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தவர்கள். திராவிடக் கட்சிகளுடன் இனி ஒருபோதும் கூட்டணி இல்லையென்று உரக்கப் பேசி வந்தவர்கள். இத்தகைய சூழலில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்காக அ.தி.மு.கவுடன் பா.ம.க கூட்டணி வைத்திருப்பது உறுதியானது. அந்தத் தருணத்திலிருந்து ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இருவரும் திராவிடக் கட்சிகள் குறித்து விமர்சித்த செய்திகளை இணையவாசிகள் பகிர்ந்து வருகிறார்கள். குறிப்பாக அ.தி.மு.க கட்சி குறித்தும், எடப்பாடி பழனிசாமி ஆட்சியையும் ராமதாஸ் விமர்சித்த கருத்துகள் பரவலாக்கப்படுகின்றன.

எதிரொலி மணியன்

இதுகுறித்து பா.ம.க தரப்பு என்ன சொல்கிறது எனத் தெரிந்துகொள்ளும் விதமாக பா.ம.க தேர்தல் பிரசாரக் குழுத் தலைவர் எதிரொலி மணியணிடம் பேசினேன் ``ஸ்டாலின் காங்கிரஸ் பற்றி எவ்வளவோ விமர்சனம் பண்ணாரு. இன்னைக்கு அவர் காங்கிரஸ் கூட கூட்டணியில இல்லையா? உதாரணத்திற்கு வைகோவை எடுத்துக்கோங்க தி.மு.கவையும் ஸ்டாலினையும் பத்தி அவர் பேசாத பேச்சா. இப்போ அவர் தி.மு.க கூட கூட்டணியில இல்லையா? அந்தக் காலத்துல ரிக்கார்டு பண்ற வசதியெல்லாம் இல்லை. இருந்திருந்தா இவங்க கதை என்னென்னு தெரிஞ்சு இருக்கும். ஸ்டாலினுக்கும் வைகோவிற்கும் எங்களை விமர்சிக்க தகுதி இல்லை. 

எதிரொலி மணி ராமதாஸ்

ஆளுங்கட்சி மீது விமர்சனம் இருக்கு. அதுக்காக சும்மா விமர்சனம் பண்ணிட்டு அப்படியே வீணாப் போய்விடக் கூடாது. மக்களுக்கு என்னென்ன தேவைன்னு பட்டியலிட்டு எங்களோட பத்து அம்ச கோரிக்கைகளை ஆளுங்கட்சியிடம் கொடுத்தோம். அதற்கு அவங்க ஒப்புக்கொண்டதுக்கு அப்புறந்தான் கூட்டணிக்குச் சம்மதித்தோம்.தி.மு.கவைக் காட்டிலும் மக்கள் நலனில் அ.தி.மு.க-விற்கு அக்கறையும் பொறுப்பும் இருக்கிறது. மக்களின் நலனுக்காகத்தான் அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்தோம்" என்றார் எதிரொலி மணி. 


 


[X] Close

[X] Close