நிர்மலா தேவி விவகாரம் - பேராசிரியர் முருகன், கருப்பசாமி பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி! | srivilliputhur court bail approved to professor murugan and karuppasami

வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (19/02/2019)

கடைசி தொடர்பு:23:30 (19/02/2019)

நிர்மலா தேவி விவகாரம் - பேராசிரியர் முருகன், கருப்பசாமி பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி!

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரை பிணையில் செல்ல திருவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது தொடர்பாக விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியர் நிர்மலாதேவியுடன் மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் கடந்த ஏப்ரல் கைது செய்யப்பட்டனர். தற்போது 3 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்த வழக்கு திருவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

நீதிமன்றம்

இந்நிலையில் முருகன், கருப்பசாமி ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி கடந்த நவம்பர் 4-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அதன்படி முருகன், கருப்பசாமி ஆகியோருக்குக் கடந்த 12-ம் தேதி ஜாமீன் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து திருவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வருவதால் முருகன், கருப்பசாமி தரப்பு வழக்கறிஞர்கள் ஜாமீனுக்கான உத்தரவு ஆணையை நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தனர். அப்போது இரண்டு பேருக்கும் தலா 2 பேரை ஜாமீன்தாரர்களாக ஏற்றுக் கொண்டு நீதிபதி சுமதி சாய்பிரியா பிணையில் செல்ல உத்தரவிட்டார்.

நீதிமன்றம்

மேலும் பிணையில் உள்ள நாள்களில் முருகன், கருப்பசாமி ஆகிய 2 பேரும் வெளிநாடு செல்லவோ, சாட்சிகளை கலைக்கவோ கூடாது. விசாரணை நடைபெறும் நாள்களில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் எனத் தெரிவித்தார்.


[X] Close

[X] Close