சிவகங்கை அருகே நடைபெற்ற திருக்கோஷ்டியூர் தெப்பத் திருவிழா! - வழிபாடு செய்ய குவிந்த பக்தர்கள் | Perumal temple festival in sivagangai

வெளியிடப்பட்ட நேரம்: 21:54 (19/02/2019)

கடைசி தொடர்பு:21:54 (19/02/2019)

சிவகங்கை அருகே நடைபெற்ற திருக்கோஷ்டியூர் தெப்பத் திருவிழா! - வழிபாடு செய்ய குவிந்த பக்தர்கள்

108 திவ்ய தேசங்களில் ஒன்றாகப் போற்றப்படும் ஸ்ரீ சௌமியா நாராயண பெருமாள் திருக்கோயில் தெப்பத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் அமைந்துள்ள ஸ்ரீ சௌமியா நாராயண பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகப் போற்றப்படுகின்றது. இங்கு ஆண்டுதோறும் மாசி மாதம் மகா நட்சத்திரம் அன்று தெப்பத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருவது வழக்கம் .கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய தெப்பத் திருவிழாவில் 11 நாள் திருவிழா நடைபெறும். நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளிய வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து இன்று 10ம் நாள், தெப்பத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இக்கோயிலில் வேண்டுதலை நிறைவேற்றக் கோரி இங்குள்ள ஜோசியர் தெப்பக்குளம் கரையில் விளக்குகளை ஏற்றியும், பிறர் ஏற்றிய விளக்கை வீட்டிற்கு எடுத்துச் சென்று பெருமாளிடம் வேண்டி தீபம் ஏற்றினால் நினைத்த காரியம் கை கூடுவதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து தீபம் ஏற்றி வழிபாடு நடத்தி பெருமாளை வணங்கிச் சென்றனர். மாவட்டம் முழுவதிலுமிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். சிறப்புப் பேருந்துகள் மாவட்டம் முழுவதிலுமிருந்து இயக்கப்பட்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close