`பட்டாசு ஆலைகளை திறக்க வேண்டும்' - சிவகாசியில் தொழிலாளர்களுக்காக களத்தில் இறங்கிய மாற்றுத்திறனாளிகள்! | differently abled persons held protest for open the firework factory in sivakasi

வெளியிடப்பட்ட நேரம்: 07:18 (20/02/2019)

கடைசி தொடர்பு:07:20 (20/02/2019)

`பட்டாசு ஆலைகளை திறக்க வேண்டும்' - சிவகாசியில் தொழிலாளர்களுக்காக களத்தில் இறங்கிய மாற்றுத்திறனாளிகள்!

மாற்றுத்திறனாளிகள்

பட்டாசு ஆலைகளை உடனடியாக திறக்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சிவகாசியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாற்றுத்திறனாளிகள்

விருதுநகர் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. பேரியம் நைட்ரேட் பயன்படுத்தக் கூடாது. பசுமை பட்டாசுகளை மட்டுமே தயாரிக்க வேண்டும். சரவெடிகளை தயாரிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் பட்டாசு உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. ஆலைகள் மூடப்பட்டுள்ளன. கடந்த 100 நாள்களுக்கும் மேலாக சுமார் 8 லட்சம் பட்டாசுத் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பின்றி குடும்பத்தை நடத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.

ஆலைகளை திறக்கக் கோரி தொழிலாளர்கள் மனிதச்சங்கிலி, உண்ணாவிரதம், காத்திருப்பு என பலகட்ட போராட்டங்களை நடத்தியும் கூட இதுவரை திறக்கப்படவில்லை. இந்த நிலையில், பட்டாசு ஆலைகளை உடனடியாக திறக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆலைகளைத் திறக்கும் வரை தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், விருதுநகர் காதுகேளாதோர் நலச்சங்கம் சார்பில் சிவகாசி பேருந்து நிலையம் அருகே இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாற்றுத்திறனாளிகள்

இதில் பலர் பங்கேற்றனர். போராட்டத்தின்போது ஆலைகளைத் திறந்து எங்களுக்கு வேலை கொடுங்கள். எங்கள் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றுங்கள் எனத் தெரிவித்தனர்.


[X] Close

[X] Close