`பரம்பரை உரிமை இல்லை; அரசுக்குத்தான் சொந்தம்' - பத்மநாபசுவாமி கோயில் வழக்கில் கேரள அரசு வாதம்! | trivandrum padmanabhaswamy temple is owned for kerala government

வெளியிடப்பட்ட நேரம்: 08:23 (20/02/2019)

கடைசி தொடர்பு:08:23 (20/02/2019)

`பரம்பரை உரிமை இல்லை; அரசுக்குத்தான் சொந்தம்' - பத்மநாபசுவாமி கோயில் வழக்கில் கேரள அரசு வாதம்!

``திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் திருவிதாங்கூர் ராஜ குடும்பத்துக்கு பரம்பரை உரிமை இல்லை. பொது வழிபாட்டுத் தலங்கள் அரசுக்குத்தான் சொந்தம்'' என கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பத்மநாபசுவாமி கோயில்


திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலை மாநில அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதற்கு எதிராக திருவிதாங்கூர் ராஜ குடும்பத்தினர் உள்ளிட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். அந்த மனு மீதான வாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ஏற்கெனவே 2011-ம் ஆண்டுவரை இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பல உத்தரவுகள் பிறப்பித்த நிலையில், அந்த வழக்கில் இறுதி வாதம் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

பத்மநாபசுவாமி கோயில்

நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான பெஞ்ச் வாதங்களைக் கேட்டுவருகிறது. நேற்று நடந்த வாதத்தில் ``திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் திருவிதாங்கூர் ராஜ குடும்பத்துக்கு பரம்பரை உரிமை இல்லை. கோயில் ராஜ குடும்பத்தின் சொத்து இல்லை. பொது வழிபாட்டுத் தலங்கள் அரசுக்குத்தான் சொந்தம்" எனவும் அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இன்றும் தொடர்ந்து வாதம் நடக்கிறது.


[X] Close

[X] Close