`18 எம்.எல்.ஏ-க்கள் ரோட்டில் பிச்சை எடுக்குறாங்க' - திண்டுக்கல் சீனிவாசன் மீண்டும் சர்ச்சை! | dindigul sreenivaasan talks about pmk admk alliance

வெளியிடப்பட்ட நேரம்: 09:09 (20/02/2019)

கடைசி தொடர்பு:09:09 (20/02/2019)

`18 எம்.எல்.ஏ-க்கள் ரோட்டில் பிச்சை எடுக்குறாங்க' - திண்டுக்கல் சீனிவாசன் மீண்டும் சர்ச்சை!

தகுதி நீக்கம் செய்யப்பட்ட டி.டி.வி அணியைச் சார்ந்த 18 எம்.எல்.ஏ-க்கள் ரோட்டில் பிச்சை எடுப்பதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

செங்கோட்டையன்

மதுரை மேலூர் மூவேந்தர் பண்பாட்டு கழகத்தில் அ.தி.மு.க, கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா, மேலூர் தொகுதி  எம்.எல்.ஏ., பெரிய புள்ளான் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்துகொண்டனர்.

திண்டுக்கல் சீனிவாசன்

அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில்,  ``அ.தி.மு.க, பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., வழியில் வந்த அசைக்க முடியாத கட்சி. இதை அம்மாவுக்குப் பிறகு முதல்வர் மற்றும் துணை முதல்வரும் சிறப்பாக வழி நடத்துகின்றனர். பா.ஜ.க மற்றும் பா.ம.க உடனான கூட்டணி வலுவான கூட்டணியாக அமைந்துள்ளது. எனவே, நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவோம். வருங்காலத்தில் ப்ளஸ் டூ முடித்த அனைவருக்கும் வேலைவாய்ப்புகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும்'' என்றார்.

 

திண்டுக்கல் சீனிவாசன்

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறுகையில், `` கருணாநிதி சிலை திறப்பின்போது ராகுல்தான் வருங்கால பிரதமர் என்று முழக்கமிட்ட ஸ்டாலினால் மம்தா பேனர்ஜி அழைத்த விழாவில் பேச முடியவில்லை. பா.ம.க மற்றும் ம.தி.மு.க.வுக்கு அங்கீகாரம் வழங்கியது ஜெயலலிதாதான். கஜா புயலால் மக்கள் சோற்றுக்கு இல்லாமல் அலைந்தார்கள் அவர்களுக்கு 2,000 பணம் நேரடியாக வங்கிக் கணக்கில் வழங்கப்பட்டுள்ளது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.-க்கள் ரோட்டில் பிச்சை எடுக்கின்றனர். இப்போது இடைத்தேர்தல் வைத்தாலும் 21 இடங்களிலும் வெற்றி பெறுவோம். ஆசிரியர்கள் போராட்டத்தை மக்கள் விரும்பவில்லை. ஸ்டாலின் தூண்டுதல் பெயரில் வீணாகப் போனது, அவர் ஆசையும் கலைந்தது என்றார்.


[X] Close

[X] Close