பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் தேவர் அமைப்புகள் போராட்டம்! | devar associations held protest for Various request

வெளியிடப்பட்ட நேரம்: 09:30 (20/02/2019)

கடைசி தொடர்பு:09:30 (20/02/2019)

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் தேவர் அமைப்புகள் போராட்டம்!

மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை வைக்க வலியுறுத்தி, தமிழ்நாடு தேவர் பேரவையினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தேவர் அமைப்புகள்

மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை வைக்க வேண்டுமென்று பா.ஜ.க தலைவர்கள் சுப்ரமணியன் சுவாமி, ஹெச்.ராஜா ஆகியோர் தொடர்ந்து கூறிவருகின்றனர். ஆனால், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி இமானுவேல் சேகரன் பெயரை சூட்ட வேண்டும் என கோரிக்கைகள் விடுத்தார். மதுரையில் உள்ள பொதுமக்கள் மதுரை மீனாட்சி அம்மனின் பெயரை சூட்ட வேண்டும் என கோரிவருகின்றனர். மதுரை விமான நிலையத்துக்கு பெயர் வைப்பது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்கள் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மதுரை பன்னாட்டு விமான நிலையத்துக்கு தேவர் பெயரை வைக்க வேண்டும் என தமிழ்நாடு தேவர் பேரவையினர் 150-க்கும் மேற்பட்ட நபர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டு போராட்டம் நடத்தினர். 

மதுரை விமான நிலையம்

அப்போது அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்க வேண்டும். 7-ம் வகுப்பு பாடத் திட்டத்தில் அவருடைய முழு வரலாற்றைப் பதிவு செய்ய வேண்டும். மேலும், சுதந்திரப் போராட்ட வீரர்கள் மருது சகோதர்கள் பிறந்த ஊரான நரிக்குடியில் முழு உருவ வெண்கலச் சிலையுடன் மணிமண்டபம் அமைக்க வேண்டும். மதுரை விமான நிலையத்துக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும்'' என்றனர். மேலும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய, மாநில அரசுக்கு எதிராக போராட்டத்திலும், சாலை மறியலில் ஈடுபட்ட 150 பேரை தல்லாகுளம் காவல்துறையினர் கைது செய்தனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி இன்று மதுரையில் தேவர் அமைப்புகள் சார்பில் கடையாடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.


[X] Close

[X] Close