தெப்பக்காடு யானைகள் முகாம் துவங்குவதில் தாமதம் - வனத்துறை அமைச்சர் காரணமா? | Forest minister delays theppakad elephants refreshment camp

வெளியிடப்பட்ட நேரம்: 09:50 (20/02/2019)

கடைசி தொடர்பு:09:50 (20/02/2019)

தெப்பக்காடு யானைகள் முகாம் துவங்குவதில் தாமதம் - வனத்துறை அமைச்சர் காரணமா?

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எப்பாேது வருவார் என்பது தெரியாததால், முதுமலை வளர்ப்பு யானைகளுக்கான புத்துணர்வு முகாம் குறித்த தேதியில் துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தெப்பக்காட்டில், வனத்துறை பராமரிப்பில் யானைகள் முகாம் செயல்பட்டு வருகிறது. இந்த முகாமில் கும்கி யானைகள் உட்பட 24 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஆண்டுதாேறும் டிசம்பர் மாதம் இறுதியில் அல்லது ஜனவரி மாத துவக்கத்திலிருந்து 48 நாள்கள் தெப்பக்காடு வளர்ப்பு யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நடைபெறும். இந்த ஆண்டுக்கான புத்துணர்வு முகாமை நேற்றுமுன்தினம் 18-ம் தேதி வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் துவக்கி வைப்பார் எனக் கூறப்பட்டது. ஆனால், முகாம் துவங்கப்படவில்லை.

இது குறித்து முதுமலை புலிகள் காப்பக இணை இயக்குநர் செண்பகபிரியா கூறுகையில், ``தெப்பக்காடு யானைகள் முகாமில் பராமரிக்கப்படும் 24 யானைகளுக்கான 48 நாள்கள் புத்துணர்வு முகாம் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த 48 நாள்கள் வனப்பகுதியில் தீவனங்கள் வளரும் என்பதால், காட்டுக்கும் ஓய்வு, யானைகளுக்கும் ஓய்வு கிடைக்கும். புத்துணர்வு முகாம் நடைபெறும் 48 நாள்களுக்கும் ஒரு யானைக்கு 150 கிலோ பசுந்தீவனம் என்ற அளவில் தீவனம் வழங்கப்படும். மேலும், பச்சைப்பயிறு, தாது உப்பு, தேங்காய் உட்பட வழக்கமான அரிசி, ராகி உள்ளிட்ட உணவுகளும் வழங்கப்படும், வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு விடப்படமாட்டாது. புத்துணர்வு முகாமில் யானைகளின் ஆரோக்கியத்தைக் கண்காணிக்க மருத்துவக்குழு தயார் நிலையில் இருக்கும். 

தற்பாேது முகாமில் உள்ள 24 யானைகளுக்கும் பல்வேறு சிகிச்சைகள், பயிற்சிகள், சத்தான உணவுகள், ஊட்டச்சத்து மற்றும் முழு ஓய்வு அளிக்கப்படும். முகாம் நடக்கும் 48 நாள்களும் யானை சவாரி ரத்து செய்யப்படும். ஆனால், சுற்றுலாப் பயணிகளுக்கான வாகன சவாரிகள் தாெடரும்’’ என்றார். நேற்றுமுன்தினம் துவங்குவதாக இருந்த புத்துணர்வு முகாம் எப்போது துவங்கும் என்று கேட்டதற்கு, ``அமைச்சர் அலுவலகத்திலிருந்து குறித்துக் காெடுக்கும் தேதியில் புத்துணர்வு முகாம் துவங்கும்" என்றார். 

கடந்த ஆண்டு கார்குடியில் காகித மறுசுழற்சி மையம் அமைக்கப்பட்டது. அதன் திறப்பு விழாவுக்கு ஏன் அழைக்கவில்லை என்று முன்னாள் துணை இயக்குநரிடம் அமைச்சர் கடிந்துகாெண்டதாக கூறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் புத்துணர்வு முகாமை துவக்கி வைக்க அமைச்சர் வருகையை எதிர்நோக்கியுள்ளனர் அதிகாரிகள். ஆனால், அமைச்சர் கட்சி, கூட்டணி, தேர்தல் விஷயங்களில் பிசியாக உள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close